472 தொழிலாளருக்கு முதல் டோஸ் 103 பேருக்கு இரண்டாவது டோஸ்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

472 தொழிலாளருக்கு முதல் 'டோஸ்' 103 பேருக்கு இரண்டாவது 'டோஸ்'

Added : ஆக 22, 2021
Share
திருப்பூர்:திருப்பூரில் நேற்று நடந்த முகாமில், 472 தொழிலாளருக்கு முதல் டோஸ்; 103 தொழிலாளருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.'தினமலர்' நாளிதழ், இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) சார்பில், தொழிலாளருக்கு இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டம், கடந்த ஜூன் மாதம் முதல், திருப்பூரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.கொரோனாவை ஒழித்து, தொழில் வளர்ச்சி காண்பதற்காக, தங்கள்
 472 தொழிலாளருக்கு முதல் 'டோஸ்' 103 பேருக்கு இரண்டாவது 'டோஸ்'

திருப்பூர்:திருப்பூரில் நேற்று நடந்த முகாமில், 472 தொழிலாளருக்கு முதல் டோஸ்; 103 தொழிலாளருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.'தினமலர்' நாளிதழ், இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) சார்பில், தொழிலாளருக்கு இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டம், கடந்த ஜூன் மாதம் முதல், திருப்பூரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.கொரோனாவை ஒழித்து, தொழில் வளர்ச்சி காண்பதற்காக, தங்கள் தொழிலாளருக்கு தடுப்பூசி செலுத்துவதில், ஆடை உற்பத்தி உட்பட பல்வேறு வகை நிறுவனங்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன.சில நிறுவனங்கள், தற்போது, தொழிலாளருக்கு, இரண்டாவது 'டோஸ்' தடுப்பூசி செலுத்த துவங்கியுள்ளன. நேற்று இரண்டு நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.திருப்பூர் - பி.என்., ரோடு, பூலுவப்பட்டியில் உள்ள எஸ்டீ எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் நடந்த முகாமை, சி.ஐ.ஐ., திருப்பூர் மாவட்ட கவுன்சில் முன்னாள் தலைவர் வெங்கடேஷ், ஒருங்கிணைப்பாளர் நவநீத கண்ணன், ஏ.எம்.சி., மருத்துவமனை மருத்துவ அதிகாரி மீனுபிரியா, நிர்வாக மேலாளர் செல்வகுமார், எஸ்டீ எக்ஸ்போர்ட்ஸ் நிர்வாக இயக்குனர் லீலாவதி, மனிதவள மேலாளர் சிவராஜ் துவக்கி வைத்தனர்.இந்த நிறுவனத்தில் புதிதாக பணியில் இணைந்துள்ள 295 தொழிலாளர்களுக்கு முதல் டோஸ் மற்றும் 103 தொழிலாளருக்கு இரண்டாவது 'டோஸ்' தடுப்பூசி செலுத்தப்பட்டது.ஜெ.ஜெ., மில்ஸ் நிறுவனத்தின் திருப்பூர் - மங்கலம் ரோடு பிரிவு மற்றும் பெருந்துறை சிப்காட் வளாக கிளைகளில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இந்நிறுவனத்தில் பணிபுரியும் 472 தொழிலாளருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.இரண்டு நிறுவனங்களில் நடத்தப்பட்ட முகாமில், நேற்று, மொத்தம் 575 தொழிலாளருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி செலுத்திய தொழிலாளருக்கு, விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, சான்று வழங்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X