பொது செய்தி

தமிழ்நாடு

3 மாதத்தில் மாயமான 78 பேர் மீட்பு! போலீஸ் கமிஷனர் தகவல்

Added : ஆக 22, 2021
Share
Advertisement
திருப்பூர்;''திருப்பூரில், கடந்த மூன்று மாதங்களில், மாயமானவர்களில், 78 பேர் மீட்கப்பட்டுள்ளனர்'' என்று போலீஸ் கமிஷனர் வனிதா கூறினார்.திருப்பூர் மாநகர போலீசார் சார்பில், காணாமல் போனவர்களை கண்டறிந்து, அவர்களது குடும்பத்தினர், உறவினர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி சிறுபூலுவபட்டியில், நேற்று நடந்தது.போலீஸ் கமிஷனர் வனிதா பேசியதாவது:காணாமல் போனவர்களை கண்டுபிடித்து,
 3 மாதத்தில் மாயமான 78 பேர் மீட்பு! போலீஸ் கமிஷனர் தகவல்

திருப்பூர்;''திருப்பூரில், கடந்த மூன்று மாதங்களில், மாயமானவர்களில், 78 பேர் மீட்கப்பட்டுள்ளனர்'' என்று போலீஸ் கமிஷனர் வனிதா கூறினார்.திருப்பூர் மாநகர போலீசார் சார்பில், காணாமல் போனவர்களை கண்டறிந்து, அவர்களது குடும்பத்தினர், உறவினர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி சிறுபூலுவபட்டியில், நேற்று நடந்தது.போலீஸ் கமிஷனர் வனிதா பேசியதாவது:காணாமல் போனவர்களை கண்டுபிடித்து, குடும்பத்தினர், உறவினர்களிடம் ஒப்படைக்கும் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. பொதுமக்கள் விழிப்புணர்வுக்கான நிகழ்வு. காணாமல் போனவர்கள் பற்றிய வழக்குகளை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது. இது அவர்களின் வாழ்க்கையை மாற்றக் கூடிய ஒன்றாக இருக்கும். பெற்றோர்களும், உறவினர்களும் தங்கள் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும்.மாநகரில், கடந்த, 2015 முதல், 2021ம் ஆண்டு வரை, மாயமானது தொடர்பாக 2,371 வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இதுவரை, 2,155 வழக்குகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 216 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த, 3 மாதங்களில், 94 வழக்கு பதியப்பட்டது. எட்டு பழைய வழக்கு, 71 புதிய வழக்கில் மாயமானவர்கள் கண்டறியப்பட்டனர். அதில், மூன்று சிறுவர், 12 சிறுமியர் என, 15 குழந்தைகள் அடங்கும். இந்த வழக்குகளில், ஒன்று கொலை வழக்காகவும், மூன்று தற்கொலை வழக்காகவும் மாற்றப்பட்டது. ஒவ்வொரு வழக்கிலும் தீவிரமான விசாரணை நடக்கிறது. மாயமானவர்களை கண்டுபிடிக்க ஒவ்வொரு ஸ்டேஷன்களில் ஒரு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை, வேறு பணிக்கு பயன்படுத்தாமல், இந்த பணிக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றனர்.இவ்வாறு, அவர் பேசினார். போலீஸ் துணை கமிஷனர் அரவிந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X