தமிழ்நாடு

'ஸ்மார்ட் சிட்டி' திட்ட பணிகளுக்கு ஆட்கள் தேவை! பணியிடம் கேட்க மாநகராட்சி திட்டம்

Updated : ஆக 22, 2021 | Added : ஆக 22, 2021
Share
Advertisement
கோவை:'ஸ்மார்ட் சிட்டி' மற்றும் 'அம்ரூட்' திட்ட பணிகளை மேலாண்மை செய்ய, போதிய பணியிடங்கள் கேட்டு, தமிழக அரசுக்கு மீண்டும் கடிதம் எழுத, கோவை மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.மத்தியில் காங்., ஆட்சியில் இருந்தபோது, 2007ல் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டம் (ஜே.என்.என்.யு.ஆர்.எம்.,) அறிவிக்கப்பட்டது. அப்போது, குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை மற்றும்
 'ஸ்மார்ட் சிட்டி' திட்ட பணிகளுக்கு  ஆட்கள் தேவை! பணியிடம் கேட்க மாநகராட்சி திட்டம்

கோவை:'ஸ்மார்ட் சிட்டி' மற்றும் 'அம்ரூட்' திட்ட பணிகளை மேலாண்மை செய்ய, போதிய பணியிடங்கள் கேட்டு, தமிழக அரசுக்கு மீண்டும் கடிதம் எழுத, கோவை மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

மத்தியில் காங்., ஆட்சியில் இருந்தபோது, 2007ல் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டம் (ஜே.என்.என்.யு.ஆர்.எம்.,) அறிவிக்கப்பட்டது. அப்போது, குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்காக உருவாக்கிய பணியிடங்களுக்கான அனுமதியை, 2016 முதல், 2021 மார்ச் வரை மட்டும் தமிழக அரசு நீட்டித்து வழங்கியது.இனி, காலநீட்டிப்பு வழங்க இயலாது என, அரசு திட்டவட்டமாக தெரிவித்ததால், ஜே.என்.என்.யு.ஆர்.எம்., பிரிவுக்கு தோற்றுவித்த பணியிடங்களை கலைக்க வேண்டும்; மற்ற உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து வந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை திருப்பி அனுப்ப வேண்டிய நெருக்கடி, மாநகராட்சிக்கு ஏற்பட்டுள்ளதுஆனால், ஜே.என்.என்.யு.ஆர்.எம்., திட்டத்தில் எடுத்த பணிகளில், 4.91 கி.மீ., துாரத்துக்கு குழாய் பதிப்பது; நஞ்சுண்டாபுரத்தில் சுத்திகரிப்பு நிலையம் கட்டுவது உள்ளிட்டவை இன்னும் முடியாமல் இருக்கின்றன.

இவை தவிர, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் குளங்கள் மேம்பாடு, மாடல் ரோடு, தெருவிளக்குகளை எல்.இ.டி.,களாக மாற்றுவது, மைக்ரோ கம்போஸ்ட் சென்டர் கட்டுவது, 'பயோமைனிங்' உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.இவற்றை மேலாண்மை செய்வதற்கு கண்காணிப்பு பொறியாளர், நிர்வாக பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், உதவி/ இளநிலை பொறியாளர்கள், வரைவு அலுவலர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் என, 41 அலுவலர்கள் தேவைப்படுகின்றனர்.

ஜே.என்.என்.யு.ஆர்.எம்., பிரிவை கலைத்து, பணியாளர்களை திருப்பி அனுப்பி விட்டால், 'ஸ்மார்ட் சிட்டி' மற்றும் 'அம்ரூட்' திட்ட பணிகள் முடங்கும் அபாயம் இருக்கிறது.அதனால், தற்சமயம் செயல்படுத்தி வரும் பணிகளை குறிப்பிட்டு, பணியிடங்கள் தோற்றுவிக்க அனுமதி கேட்டு, மீண்டும் அரசின் கவனத்துக்கு கடிதம் அனுப்ப, மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

மாநகராட்சி பொறியியல் பிரிவினர் கூறுகையில், 'மழை நீர் வடிகால் கட்டுவது, ரோடு போடுவது, தெருவிளக்கு பராமரிப்பது, சமுதாய கூடம் கட்டுவது உள்ளிட்ட வழக்கமான பணிகளுடன், 'ஸ்மார்ட் சிட்டி', 'அம்ரூட்' உள்ளிட்ட வேலைகளும் செய்யப்படுகின்றன. 'அவற்றை மேலாண்மை செய்ய, போதிய பணியிடங்கள் கேட்டு, அரசுக்கு மீண்டும் கடிதம் எழுதப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X