ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் குளிர்பதன கிடங்குகள் வாடகைக்கு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் குளிர்பதன கிடங்குகள் வாடகைக்கு

Added : ஆக 22, 2021
Share
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையத்தில் வேளாண் வணிகத்துறைக்கு உட்பட்ட, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 125 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட, 4 குளிர் பதன கிடங்குகள், ஜெனரேட்டர் வசதியுடன் வாடகைக்கு உள்ளன.காரமடையில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் உள்ளது. இதன் கண்காணிப்பாளர் சந்திரமோகன் கூறியுள்ளதாவது:மேட்டுப்பாளையம் -- சிறுமுகை சாலை, நேஷனல் நகர்

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையத்தில் வேளாண் வணிகத்துறைக்கு உட்பட்ட, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 125 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட, 4 குளிர் பதன கிடங்குகள், ஜெனரேட்டர் வசதியுடன் வாடகைக்கு உள்ளன.காரமடையில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் உள்ளது. இதன் கண்காணிப்பாளர் சந்திரமோகன் கூறியுள்ளதாவது:மேட்டுப்பாளையம் -- சிறுமுகை சாலை, நேஷனல் நகர் அருகே, தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், மெகா மார்க்கெட் காம்ப்ளக்ஸ், அலுவலக கட்டடம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.இதில், 125 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட, 4 குளிர் பதன கிடங்குகள், ஜெனரேட்டர் வசதியுடன் உள்ளது. வாழை பதப்படுத்தும் மையம், 40 மெட்ரிக் டன் குளிர்பதன வசதியுடன், கிடங்கு உள்ளது.இதை குறைந்தபட்ச வாடகை அடிப்படையில், விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு, குத்தகை ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ள விவசாயிகள் மற்றும் வியாபாரிகள், காரமடை ஒழுங்குமுறை விற்பனை கூடம் அலுவலகத்தை, தொடர்பு கொள்ள வேண்டும்.மேலும் விபரங்களை தெரிந்து கொள்ள, 98429 31585 என்ற மொபைல் போன் எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X