அரசு மகளிர் கல்லுாரியில் சேர வரும் 25ல் கலந்தாய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மகளிர் கல்லுாரியில் சேர வரும் 25ல் கலந்தாய்வு

Added : ஆக 22, 2021
Share
கோவை:கோவை புலியகுளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 2021-22 ம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை வரும், 25ம் தேதி துவங்கி, செப்., 3ம் தேதி வரை நடக்கவுள்ளது.இக்கல்லுாரியில், சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவினருக்கு, 25ம் தேதியும், 26ம் தேதி வணிகவியல் பிரிவுக்கும், 27ல் கணிதவியல், கணினி அறிவியல் பிரிவுக்கும், 31ம் தேதி தமிழ் மற்றும் ஆங்கில பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு

கோவை:கோவை புலியகுளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 2021-22 ம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை வரும், 25ம் தேதி துவங்கி, செப்., 3ம் தேதி வரை நடக்கவுள்ளது.இக்கல்லுாரியில், சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவினருக்கு, 25ம் தேதியும், 26ம் தேதி வணிகவியல் பிரிவுக்கும், 27ல் கணிதவியல், கணினி அறிவியல் பிரிவுக்கும், 31ம் தேதி தமிழ் மற்றும் ஆங்கில பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடக்கும். இரண்டாம் கட்ட கலந்தாய்வு, செப்., 2ல் வணிகவியல், கணினி அறிவியல், கணிதவியல் மாணவிகளுக்கும், 3ம் தேதி தமிழ், ஆங்கிலத்துறை மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடக்கும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, மொபைல்போன் மூலம் தகவல் அளிக்கப்படும். மேற்குறிப்பிட்ட நாட்களில், உரிய சான்றிதழ்களுடன் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். கட்டணத்தை அன்றே கல்லுாரியில் செலுத்த வேண்டியது அவசியம் என, கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X