பொது செய்தி

தமிழ்நாடு

ஜெயலலிதாவை கும்பிடணுமா

Added : ஆக 22, 2021
Share
Advertisement
கோவை:கோவை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், கோவில் கட்டி, அதன் ஒரு பகுதியில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை, சுவாமி போல் அமைத்துள்ள சிற்பத்தை அகற்ற வேண்டும் என்கிற கோரிக்கை, அப்பகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.கோவை மாநகராட்சி, 100வது வார்டு, மேட்டூர் கணேசபுரத்தில், மூராண்டம்மன் சாலையில், ரூ.10 லட்சத்தில், இறகுபந்து உள்விளையாட்டு அரங்கம், ரூ.10 லட்சம் செலவில்,
 ஜெயலலிதாவை கும்பிடணுமா

கோவை:கோவை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், கோவில் கட்டி, அதன் ஒரு பகுதியில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை, சுவாமி போல் அமைத்துள்ள சிற்பத்தை அகற்ற வேண்டும் என்கிற கோரிக்கை, அப்பகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.கோவை மாநகராட்சி, 100வது வார்டு, மேட்டூர் கணேசபுரத்தில், மூராண்டம்மன் சாலையில், ரூ.10 லட்சத்தில், இறகுபந்து உள்விளையாட்டு அரங்கம், ரூ.10 லட்சம் செலவில், 'அம்மா' யோகா மையம் கட்டப்பட்டுள்ளன.யோகா மையத்தின் முகப்பில், ஸ்ரீஈசப்பன், கால பைரவர், ஆஞ்சநேயர் கோவில் கட்டப்பட்டுள்ளது. சன்னதியின் ஒரு புறத்தில் காலபைரவர், ஆஞ்சநேயர் உருவம், மற்றொரு புறத்தில் சக்கர உருவம் வடிக்கப்பட்டுள்ளது. முகப்பு பகுதியில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை, சுவாமி போல் பாவித்து, சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.அப்பகுதி மக்கள் கூறுகையில், 'கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், விதிமுறையை மீறி, மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், கோவில் கட்டினர். சுவாமி வழிபாட்டின் போது, ஜெயலலிதாவையும் வணங்கும் வகையில், சிற்பம் வடித்திருக்கின்றனர். யோகா மையம் மற்றும் உடற்பயிற்சி மையம், அ.தி.மு.க.,வினர் கட்டுப்பாட்டில் இருக்கிறது. 'சிசி டிவி' கேமரா பொருத்தி, அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். யோகா மையம், உடற்பயிற்சி மையங்களை மாநகராட்சி மீட்க வேண்டும்; ஜெயலலிதா சிற்பத்தை அகற்ற வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X