பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் இனி அனைத்து விதமான சிகிச்சை : கோவையில் கொரோனா குறைந்ததன் எதிரொலி

Added : ஆக 22, 2021
Share
Advertisement
கோவை;கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை குறைந்ததையடுத்து, அரசு மருத்துவமனையில் மீண்டும் அனைத்து விதமான சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.கோவையில் உள்ள மற்ற மருத்துவமனைகளை காட்டிலும், அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க, முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.அதன்படி, மருத்துவமனையில் ஆக்சிஜன் மற்றும் சாதாரண படுக்கைகள் என சுமார் 1,200

கோவை;கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை குறைந்ததையடுத்து, அரசு மருத்துவமனையில் மீண்டும் அனைத்து விதமான சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.கோவையில் உள்ள மற்ற மருத்துவமனைகளை காட்டிலும், அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க, முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.அதன்படி, மருத்துவமனையில் ஆக்சிஜன் மற்றும் சாதாரண படுக்கைகள் என சுமார் 1,200 படுக்கைகள், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கென ஏற்படுத்தப்பட்டுள்ளன.கொரோனா தாக்கம் அதிகமாக இருந்தபோது, இங்கு படுக்கைகள் யாவும் நிரம்பின, இதையடுத்து, அருகில் உள்ள அரசு கலைக்கல்லுாரியில் கூடுதலாக 200 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டன.தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளதால், 100க்கும் குறைவான எண்ணிக்கையில்தான் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் காரணமாக, மருத்துவமனையில் மற்ற துறைகள் யாவும் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளன.கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், ''கொரோனா காரணமாக மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வந்த முக்கிய சிகிச்சைகள் தவிர, பிற சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. தவிர, கருப்பு பூஞ்சை நோயாளிகளுக்கு அதிகளவில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கொரோனா தாக்கம் குறைந்துள்ளதால், அனைத்து துறைகளிலும், அனைத்து விதமான அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X