பொது செய்தி

தமிழ்நாடு

ஆபாச வீடியோவை உடனே அகற்றி விடலாம்! பெண்களே... இனி எந்த மிரட்டலுக்கும் பணிய வேண்டாம்

Added : ஆக 22, 2021
Share
Advertisement
கோவை:'இணையதளத்தில் இருந்து ஆபாச வீடியோக்களை, 24 மணி நேரத்தில் அகற்றிவிடலாம்; பாதிக்கப்படும் பெண்கள் தைரியமாக முன்வர வேண்டும்' என சைபர் க்ரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். சமூகவலைதள ஆதிக்கம் உள்ள இச்சூழலில், கல்லூரி மாணவிகள், பெண்கள் பலரும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக காதல் விவகாரம் போன்றவற்றில், பெண்களை 'ஆபாச' வீடியோக்களை எடுத்து,

கோவை:'இணையதளத்தில் இருந்து ஆபாச வீடியோக்களை, 24 மணி நேரத்தில் அகற்றிவிடலாம்; பாதிக்கப்படும் பெண்கள் தைரியமாக முன்வர வேண்டும்' என சைபர் க்ரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். சமூகவலைதள ஆதிக்கம் உள்ள இச்சூழலில், கல்லூரி மாணவிகள், பெண்கள் பலரும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக காதல் விவகாரம் போன்றவற்றில், பெண்களை 'ஆபாச' வீடியோக்களை எடுத்து, மிரட்டும் சம்பவங்களும் நடக்கின்றன.

இதுபோன்று, கடந்த சில நாட்களுக்கு முன், சிங்காநல்லூரில் ஒரு கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பணத்துக்காக, மாணவியை மிரட்டிய வாலிபர் மற்றும் அவரது தாய் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இதுபோன்ற மிரட்டல்களுக்கு, பெண்கள் பயப்படாமல் முன்வர வேண்டும் என, போலீசார் அறிவுறித்துகின்றனர்.

கோவை மாநகர சைபர் க்ரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா கூறியதாவது:ஆபாச 'வீடியோ'வை யாராவது இணையதளத்தில், பதிவேற்றி விடுவேன் என்று மிரட்டினால் பெண்கள் யாரும் அஞ்ச வேண்டாம். அப்படிப்பட்ட 'வீடியோ' எந்த இணையதளத்தில் இருந்தாலும், 24 மணி நேரத்தில் உடனடியாக அப்புறப்படுத்த முடியும். இந்த உண்மையை தெரியாமல் பலர், தவறான முடிவுகளுக்கு சென்று விடுகின்றனர்.
இதற்காக பாதிக்கப்பட்ட பெண், போலீஸ் ஸ்டேஷனுக்கு நேரடியாக வரவேண்டும் என்பதில்லை. 'சி.சி.டி.என்.எஸ்., போர்ட்டல்' என்ற போலீஸ் இணையதளத்திலும், ஆன்லைன் வழியாக புகார் அளிக்கலாம். புகாரின் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.பிரச்னையின் நிலைமையை பொறுத்து, உடனடியாக அவசர வேண்டுகோளுக்கு ஏற்ப இது செயல்படுத்தப்படும். இதனால் பாதிக்கப்படும் பெண்கள், தைரியமாக முன்வர வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X