கண்டமங்கலம் அருகே கதவை உடைத்து திருட்டு

Added : ஆக 22, 2021
Share
Advertisement
கண்டமங்கலம் : கண்டமங்கலம் அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, ரூ.2.20 லட்சம் மதிப்புடைய தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.கண்டமங்கலம் போலீஸ் சரகம், மிட்டா மண்டகப்பட்டு அருகே உள்ள சின்ன புதுப்பட்டு மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரபு மனைவி திவ்யா, 33.தனது சித்தி மகள் திருமணத்திற்காக, திவ்யா கடந்த 19ம் தேதி காலை

கண்டமங்கலம் : கண்டமங்கலம் அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, ரூ.2.20 லட்சம் மதிப்புடைய தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

கண்டமங்கலம் போலீஸ் சரகம், மிட்டா மண்டகப்பட்டு அருகே உள்ள சின்ன புதுப்பட்டு மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரபு மனைவி திவ்யா, 33.தனது சித்தி மகள் திருமணத்திற்காக, திவ்யா கடந்த 19ம் தேதி காலை சென்னைக்கு சென்றார். திருமணம் முடிந்து, சித்தி வீட்டிலேயே தங்கி இருந்தார்.திவ்யாவின் மாமியார் நேற்று, புதுப்பட்டு வீட்டிற்குச் சென்றபோது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அறையில் பீரோ உடைக்கப்பட்டு,

அதில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தன.இது குறித்து சென்னையில் உள்ள திவ்யாவிற்கு மொபைல் போனில் தகவல் தெரிவிக்கப்பட்டது. 5 சவரன் தங்க நகைகள் மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரிய வந்துள்ளது. அதன் மதிப்பு ரூ.2.20 லட்சம் ஆகும்.கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து, திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X