மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

Added : ஆக 22, 2021
Share
Advertisement
புதுச்சேரி : ஓட்டலில் ஏ.சி., இயந்திரத்தை பழுது பார்த்தபோது, மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்தார்.உருளையன்பேட்டை செங்கேணியம்மன் நகர் சிதம்பரனார் வீதியை சேர்ந்தவர் கமல்,24; ஏ.சி., மெக்கானிக்.இவர், கடந்த 14ம் தேதி மதியம் 12.30 மணியளவில் மறைமலையடிகள் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் இரண்டாவது தளத்தில் பழைய ஏ.சி., இயந்திரத்தை பழுது பார்த்துக்கொண்டு இருந்தார்.அவருக்கு உதவியாக

புதுச்சேரி : ஓட்டலில் ஏ.சி., இயந்திரத்தை பழுது பார்த்தபோது, மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்தார்.

உருளையன்பேட்டை செங்கேணியம்மன் நகர் சிதம்பரனார் வீதியை சேர்ந்தவர் கமல்,24; ஏ.சி., மெக்கானிக்.இவர், கடந்த 14ம் தேதி மதியம் 12.30 மணியளவில் மறைமலையடிகள் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் இரண்டாவது தளத்தில் பழைய ஏ.சி., இயந்திரத்தை பழுது பார்த்துக்கொண்டு இருந்தார்.அவருக்கு உதவியாக சித்தப்பா நாராயணசாமி,50, சதானந்தம்,28, ஆகியோர் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

நாராயணசாமி ஏணியில் ஏறி காப்பர் பைப்பை இழுத்த போது, அருகில் இருந்த உயரழுத்த மின் கம்பியில் உரசியது.இதில் ஏணியில் இருந்த நாராயணசாமி, ஏணியை பிடித்திருந்த சதானந்தம் ஆகியோர் மின்சாரம் தாக்கி துாக்கி வீசப்பட்டனர்.புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நாராயணசாமி நேற்றுமுன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.உருளையன்பேட்டை உதவி சப் இன்ஸ்பெக்டர் அருள் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X