பொது செய்தி

தமிழ்நாடு

சங்கனுார் பள்ளத்தில் வெள்ளப்பெருக்கு

Added : ஆக 22, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:தடாகம் பகுதியில் நேற்று மதியம் பெய்த கனமழையால், அங்குள்ள சங்கனூர் பள்ளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.கோவை வடக்கு பகுதியில், நேற்று காலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. நரசிம்மநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை, 6:00 மணி முதல், 8:00 மணி வரை லேசான மழை பெய்தது.இதையடுத்து, சின்னதடாகம் வட்டாரத்தில், மாங்கரை, சின்ன தடாகம் உள்ளிட்ட பகுதிகளில் மதியம், 40
 சங்கனுார் பள்ளத்தில் வெள்ளப்பெருக்கு

பெ.நா.பாளையம்:தடாகம் பகுதியில் நேற்று மதியம் பெய்த கனமழையால், அங்குள்ள சங்கனூர் பள்ளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.கோவை வடக்கு பகுதியில், நேற்று காலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. நரசிம்மநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை, 6:00 மணி முதல், 8:00 மணி வரை லேசான மழை பெய்தது.இதையடுத்து, சின்னதடாகம் வட்டாரத்தில், மாங்கரை, சின்ன தடாகம் உள்ளிட்ட பகுதிகளில் மதியம், 40 நிமிடங்கள் கனமழை பெய்தது. இதில், அங்குள்ள ஓடைகள், சங்கனூர் பள்ளம் ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.சின்னத்தடாகம் வட்டார விவசாயிகள் கூறுகையில், 'தற்போது, சின்னத்தடாகம் வட்டாரத்தில் பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலை, பூசணி, தக்காளி உள்ளிட்ட பயிர்களுக்கு, இம்மழை உதவியாக இருக்கும். இது போல மேலும் சில நாட்கள் மழை பெய்தால், இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, இப்பகுதியில் விவசாயம் செழிக்க வாய்ப்பு ஏற்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X