அமைதியாக கொண்டாடப்பட்ட ஓணம்: கோவில் மூடலால் உற்சாகம் காணோம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அமைதியாக கொண்டாடப்பட்ட ஓணம்: கோவில் மூடலால் உற்சாகம் காணோம்

Added : ஆக 22, 2021
Share
கோவை:ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவிலுக்கு சென்ற பக்தர்கள், கோவில்கள் திறக்கப்படாததால், வெளியில் நின்று சாமி கும்பிட்டு விட்டு ஏமாற்றத்துடன், வீட்டுக்கு திரும்பி சென்றனர்.கேரளாவுக்கு அடுத்து கோவையில், ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக, நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி இல்லை. அதனால் இங்கு வசிக்கும் கேரள மக்கள், அமைதியாக வீட்டில்

கோவை:ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவிலுக்கு சென்ற பக்தர்கள், கோவில்கள் திறக்கப்படாததால், வெளியில் நின்று சாமி கும்பிட்டு விட்டு ஏமாற்றத்துடன், வீட்டுக்கு திரும்பி சென்றனர்.கேரளாவுக்கு அடுத்து கோவையில், ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக, நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி இல்லை. அதனால் இங்கு வசிக்கும் கேரள மக்கள், அமைதியாக வீட்டில் இருந்தபடி, ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.காந்திபுரத்தில் உள்ள கேரள சமாஜத்தில், கொரோனா விழிப்புணர்வு கோலம் மற்றும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், அத்தப்பூவில் வண்ணக்கோலங்கள் போட்டு பெண்கள் அசத்தி இருந்தனர். கோவை சித்தாபுதுாரில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். கொரோனா கட்டுப்பாடு காரணமாக, கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அதனால் வாசலில் நின்றபடி, சாமி தரிசனம் பார்க்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். ஐயப்பன் கோவிலுக்கு குடும்பத்துடன் வந்திருந்த பக்தர் ஒருவர் கூறுகையில், 'போன வருஷமும் சாமி தரிசனம் செய்ய முடியல, இந்த வருஷமும் அப்படியே ஆயிருச்சு. இன்னிக்கி ஒரு நாளாவது, கோவில திறக்க அனுமதிச்சி இருக்கலாம். விசேஷ தினத்துல சாமி தரிசனம் பண்ணாம போறது மனசுக்கு கஷ்டமா இருக்கு' என்றார்.கோவையில் நேற்று பல கோவில்களில், பொதுமக்கள் கோவில் வாசலில் நின்றபடி, சாமி கும்பிடுவதை பார்க்க முடிந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X