பொது செய்தி

தமிழ்நாடு

குப்பை அள்ளுவதிலும் திருட்டுத்தனம்! கடிவாளமிட்டு கட்டணம் வசூலிக்க முடிவு

Added : ஆக 22, 2021
Share
Advertisement
கோவை;கோவையில், 100 கிலோவுக்கு அதிகமாக குப்பை உருவாக்குவோர் வெளியேற்றும் கழிவுகளை சேகரிப்பது, அழிப்பது தொடர்பாக, மாநகராட்சி மீண்டும் ஆலோசிக்கத் துவங்கியுள்ளது.கோவை மாநகராட்சியில் நாளொன்றுக்கு, 850 டன் முதல், 1,000 டன் வரை குப்பை சேகரமாவதாக கணக்குச் சொல்லப்படுகிறது. விசேஷ நாட்களில் குப்பை கணக்கு அதிகரிப்பது வழக்கம்.இதில், 100 கிலோவுக்கு அதிகமாக குப்பை உருவாக்குவோர், அவர்களே,

கோவை;கோவையில், 100 கிலோவுக்கு அதிகமாக குப்பை உருவாக்குவோர் வெளியேற்றும் கழிவுகளை சேகரிப்பது, அழிப்பது தொடர்பாக, மாநகராட்சி மீண்டும் ஆலோசிக்கத் துவங்கியுள்ளது.கோவை மாநகராட்சியில் நாளொன்றுக்கு, 850 டன் முதல், 1,000 டன் வரை குப்பை சேகரமாவதாக கணக்குச் சொல்லப்படுகிறது. விசேஷ நாட்களில் குப்பை கணக்கு அதிகரிப்பது வழக்கம்.இதில், 100 கிலோவுக்கு அதிகமாக குப்பை உருவாக்குவோர், அவர்களே, தங்களது வளாகத்துக்குள் அழித்துக் கொள்ள வேண்டுமென, திடக்கழிவு மேலாண்மை விதியில் கூறப்பட்டுள்ளது.அதன்படி, அடுக்குமாடி குடியிருப்புகள், ஓட்டல்கள், வணிக வளாகம், ஷாப்பிங் மால் நடத்துவோர், அவ்வளாகத்துக்குள் குப்பை கையாள மாற்று ஏற்பாடு செய்திருக்க வேண்டும் அல்லது குப்பை தரம் பிரித்து சேகரிக்கும் ஏஜன்சிகளுடன் ஒப்பந்தம் செய்து, கட்டணம் செலுத்தி வழங்க வேண்டும். இந்நடைமுறை, இதற்கு முன் அமல்படுத்தப்பட்டது. சில அடுக்குமாடி குடியிருப்புகளில் இன்று வரை அமல்படுத்தப்படுகிறது.ஆனால், பெரும்பாலான இடங்களில், மாநகராட்சி சுகாதாரப் பிரிவினரே குப்பையை கையாள்கின்றனர். சில தருணங்களில் மாநகராட்சி தொட்டிகளில் மலைக்குன்று போல் கொட்டி விடுகின்றனர். அவற்றை அள்ளி, வாகனங்களில் ஏற்றி, கிடங்கிற்கு எடுத்துச் செல்வதற்கு, பெருந்தொகையை மாநகராட்சி செலவிடுகிறது.ஆனால், 100 கிலோவுக்கு அதிகமாக குப்பை உருவாக்குவோரிடம், சுகாதார ஆய்வாளர்களில் சிலர் பணம் பெற்றுக் கொண்டு, துாய்மை பணியாளர்கள் மூலம் சேகரித்து, மாநகராட்சி வாகனங்களில் கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. திருட்டுத்தனமாக இவ்வேலை, இரவு நேரங்களில் மேற்கொள்ளப்படுகிறது.இதை தடுக்கும் வகையில், அதிகமான குப்பை உருவாக்குவோரை மண்டல வாரியாக பட்டியலிட்டு, உதவி கமிஷனர்கள், சுகாதார அலுவலர்கள் ஆகியோர் அவர்களிடம் ஆலோசிக்க, கமிஷனர் ராஜகோபால் அறிவுறுத்தியுள்ளார். திடக்கழிவு மேலாண்மை விதிப்படி, அவர்களே கையாள வேண்டும் அல்லது தனியார் ஏஜன்சிகளிடம் தரம் பிரித்து ஒப்படைக்க வேண்டும்.மாநகராட்சியே நேரடியாக குப்பையை பெற்றுக் கொள்ள வேண்டுமெனில், நிர்ணயிக்கும் கட்டணத்தை செலுத்த அறிவுறுத்த வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X