பொது செய்தி

தமிழ்நாடு

'ரிசர்வ் சைட்'ஆக்கிரமிக்க முயற்சி: தடுத்து நிறுத்தியது மாநகராட்சி

Added : ஆக 22, 2021
Share
Advertisement
கோவை:கோவையில், ரூ.5 கோடி மதிப்புள்ள, 71 சென்ட் 'ரிசர்வ் சைட்' மாநகராட்சி அதிகாரிகளால் நேற்று மீட்கப்பட்டது.கோவை மாநகராட்சிக்கு சொந்தமான 'ரிசர்வ் சைட்'டுகள் ஆக்கிரமிப்பில் சிக்குவதும், அதை அதிகாரிகள் மீட்டு, அறிவிப்பு பலகை வைக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.மேற்கு மண்டலம், 17வது வார்டு, மருதமலை அடிவாரத்தில், அருள் நகரில், மாநகராட்சிக்கு சொந்தமான, 71

கோவை:கோவையில், ரூ.5 கோடி மதிப்புள்ள, 71 சென்ட் 'ரிசர்வ் சைட்' மாநகராட்சி அதிகாரிகளால் நேற்று மீட்கப்பட்டது.கோவை மாநகராட்சிக்கு சொந்தமான 'ரிசர்வ் சைட்'டுகள் ஆக்கிரமிப்பில் சிக்குவதும், அதை அதிகாரிகள் மீட்டு, அறிவிப்பு பலகை வைக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.மேற்கு மண்டலம், 17வது வார்டு, மருதமலை அடிவாரத்தில், அருள் நகரில், மாநகராட்சிக்கு சொந்தமான, 71 சென்ட் 'ரிசர்வ் சைட்' இருந்தது. இதை ஆக்கிரமித்து, கணுக்கால் போடும் பணி நேற்று நடந்து கொண்டிருந்தது. அப்பகுதியை சேர்ந்தவர்கள், மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தனர்.நிர்வாக பொறியாளர் ரவிச்சந்திரன் அப்பகுதிக்கு விரைந்து சென்று, ஆவணங்களை ஆய்வு செய்ததில், மாநகராட்சிக்கு சொந்தமான பொது ஒதுக்கீடு இடம் என்பது தெரியவந்தது. கணுக்கால் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய அவர், 'மாநகராட்சிக்கு சொந்தமான இடம்' என, அறிவிப்பு பலகையை நட்டார். ஆக்கிரமிக்க முயற்சித்த இடத்தின் மதிப்பு, 5 கோடி ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X