பொது செய்தி

தமிழ்நாடு

தாத்தா, பாட்டியை போல்...

Added : ஆக 22, 2021
Share
Advertisement
வெளிநாடுகளில் குழந்தைகள் துாங்குவதற்கு முன், கதை சொல்வது பெற்றோர்களின் வழக்கம். ஏன்? முன்பெல்லாம், தாத்தா, பாட்டியிடம் ஆசை, ஆசையாய் குழந்தைகள் கதை கேட்பார்கள்.இன்றைய குழந்தைப் பருவம் ஆண்ட்ராய்டிலே கழிகிறது. ஆன்லைனில் அனிமேசன் வீடியோவை காட்டுவதுடன், இன்றைய பெற்றோர் முடித்துக்கொள்கின்றனர்.கதை சொல்லுவதால் குழந்தைகளுக்கு கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொண்டால்,
 தாத்தா, பாட்டியை போல்...

வெளிநாடுகளில் குழந்தைகள் துாங்குவதற்கு முன், கதை சொல்வது பெற்றோர்களின் வழக்கம். ஏன்? முன்பெல்லாம், தாத்தா, பாட்டியிடம் ஆசை, ஆசையாய் குழந்தைகள் கதை கேட்பார்கள்.இன்றைய குழந்தைப் பருவம் ஆண்ட்ராய்டிலே கழிகிறது. ஆன்லைனில் அனிமேசன் வீடியோவை காட்டுவதுடன், இன்றைய பெற்றோர் முடித்துக்கொள்கின்றனர்.கதை சொல்லுவதால் குழந்தைகளுக்கு கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொண்டால், இன்று முதல் உங்கள் வீட்டிலும் கதை சொல்லல் வழக்கமாகிவிடும்.புதிதாக கற்பார்கள்கதை சொல்வதன் மிகப்பெரும் நன்மை, குழந்தைகளின் சொற்களஞ்சியம் மேம்படுவது. நீங்கள் கதையை படித்து காண்பிக்கும் போது, புதிய மற்றும் தெரியாத வார்த்தைகளை நிச்சயம் கேட்டு தெரிந்து கொள்வார்கள். வார்தைகள், அதன் உச்சரிப்பு, மொழியை அறிந்து கொள்வதன் மூலம் குழந்தைகளின் ஆரம்பகால எழுத்து மற்றும் மொழித்தறிவு திறன்கள் வளர்ச்சியடையும்.கேட்கும் திறன் மேம்படும்குழந்தை பருவத்தில் கதைகளை கேட்பது, அவர்களது கேட்கும் திறனை மேம்படுத்துகிறது. பெரும்பாலும், குழந்தைகள் பேசுவதையே விரும்புவார்கள். பள்ளி வகுப்பறையில் இதை நீங்கள் கவனித்திருக்கலாம். ஆனால், கதை சொல்வதன் மூலம் பேசுவதை விடவும், கேட்கும் பழக்கம் வளர்கிறது. கேட்பதன் முக்கியத்தை கதை சொல்லும் பயிற்சி மூலம் கற்றுக்கொள்கிறார்கள். அவர்களின், தகவல் தொடர்பு திறனும் வளர்கிறது.கற்பனை மற்றும் நினைவாற்றல்கதை சொல்லுதல், குழந்தைகளின் மூளை வளர்ச்சி மற்றும் கற்பனை திறனை ஊக்குவிக்கிறது. நீங்கள் குழந்தைகளுக்கு கதை சொல்லும் போது, இடையில் கேள்வி கேட்கலாம் அல்லது சில விபரங்களை நினைவுபடுத்த சொல்லலாம். எந்தளவுக்கு அவர்கள் நினைவில் வைத்துள்ளார்களா என கவனியுங்கள். நிச்சயம், இது அவர்களின் நினைவாற்றலை கூர்மைப்படுத்தும்.அறநெறிகளை வளர்க்கலாம்குழந்தைப்பருவம் முதலே நல்ல ஒழுக்க நெறிகளை சொல்லிக்கொடுக்க வேண்டும். அறிவுரையாகவோ, கண்டிப்புடன் சொன்னாலோ குழந்தைகள் கேட்க மாட்டார்கள். அதே அறிவுரைகளை, ஆர்வமூட்டும் கதைகள் மூலம் சொல்லி தாருங்கள். உங்கள் குழந்தைகளின் வயது, இயல்பை பொருத்து, நன்னெறி கதைகளை தேர்ந்தெடுத்து கூறலாம்.அதிகரிக்கும் பாசப்பிணைப்புஅன்போடு, குழந்தைகளுக்கு சொல்லி பாருங்கள்! உங்களுக்கும் அவர்களுக்கிடையேயான பாசப்பிணைப்பு அதிகரிக்கும். தினமும் புத்தகத்தை வைத்து சொல்ல வேண்டிய அவசியமில்லை. உங்கள் முன்னோர் குறித்து, வாழ்க்கை அனுபவங்கள், நெகிழ்ச்சியான சம்பவங்களையும் குழந்தைகளிடம் பகிரலாம். பெற்றோர்களின் வேலைரீதியான மனஅழுத்தத்தையும் இது குறைக்கும்.டிஜிட்டல் கதைகள் வேண்டாம்!குழந்தைகளை கவரும் வகையில் வண்ண, வண்ண படங்களுடன் இணையத்தில் பல்வேறு வீடியோ மற்றும் ஆடியோக கதைகள் இருக்கின்றன. இவை, ஒரு வழி ஊடகம் போன்றது. குழந்தைகள் கலந்துரையாட முடியாது. வீடியோவை பார்க்கும் குழந்தைகளின் சிந்திக்கும் திறன் முடங்குகிறது. மொபைல் போனுக்கு அடிமையாவதற்கும் வாய்ப்புள்ளது. தினமும் குறிப்பிட்ட நேரம், பிள்ளைகளை அரவணைத்து கதை சொல்லுங்கள். உயிர்ப்புடன் கதைகளை கேட்கத்தான் அவர்களும் விரும்புவார்கள்!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X