பொது செய்தி

தமிழ்நாடு

புலம்பெயர் தொழிலாளருக்கு இலவச காஸ் இணைப்பு

Added : ஆக 22, 2021
Share
Advertisement
திருப்பூர்:'உஜ்வாலா 2.0' திட்டத்தில், வெளிமாநில தொழிலாளர்கள், முகவரி சான்று இல்லாமலேயே, இலவச காஸ் இணைப்பு பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.கடந்த 2016 முதல், மத்திய அரசின் 'உஜ்வாலா' திட்டத்தில், மூன்று கோடி குடும்பங்களுக்கு, இலவச காஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 'உஜ்வாலா 2.0' என்ற திட்டத்தை பிரதமர் துவக்கி வைத்துள்ளார்.பாரத் எண்ணெய் நிறுவன அதிகாரிகள்

திருப்பூர்:'உஜ்வாலா 2.0' திட்டத்தில், வெளிமாநில தொழிலாளர்கள், முகவரி சான்று இல்லாமலேயே, இலவச காஸ் இணைப்பு பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.கடந்த 2016 முதல், மத்திய அரசின் 'உஜ்வாலா' திட்டத்தில், மூன்று கோடி குடும்பங்களுக்கு, இலவச காஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 'உஜ்வாலா 2.0' என்ற திட்டத்தை பிரதமர் துவக்கி வைத்துள்ளார்.பாரத் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:நாடு முழுவதும் உள்ள ஏழை குடும்பங்கள், 2024க்குள், காஸ் தேவையில் தன்னிறைவு பெறும். ஏழை பெண்கள் பெயரில், இலவச காஸ் இணைப்பு வழங்கப்படும். அதற்காக, மாவட்டம் தோறும், ஒரு எண்ணெய் நிறுவனம் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளது.எஸ்.சி., - எஸ்.டி., மற்றும்குறைந்த வருவாய் உள்ள குடும்பத்தை சேர்ந்த பெண்கள், இலவச காஸ் இணைப்பு கோரி விண்ணப்பிக்கலாம். புலம்பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர் இத்திட்டத்தால் அதிகம் பயன்பெறுவர்.சொந்த மாநிலத்தில், இலவச காஸ் இணைப்பு இருந்தாலும், தற்போதுள்ள மாநிலத்திலும், குடும்பத்தை சேர்ந்த பெண்கள் பெயரில், இலவச காஸ் இணைப்பு பெற்றுக்கொள்ளலாம்; முகவரி சான்று இல்லாமல், ஆதார் எண்ணை பயன்படுத்தி, இணைப்பு பெறலாம்.தமிழகத்தில், 'உஜ்வாலா 2.0' திட்டம், முதல்கட்டமாக, 11 மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் செப்., 1 முதல், அனைத்து மாவட்டங்களிலும் அமலுக்கு வரும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X