பொது செய்தி

தமிழ்நாடு

'டான்டீ லாபத்தில் இயங்க நடவடிக்கை'

Added : ஆக 22, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஊட்டி:''தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம், இன்னும் இரண்டு ஆண்டுகளில் லாபத்தில் இயங்கும் வகையில் நவீனப்படுத்தப்படும்,'' என, வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்தார்.நீலகிரி மாவட்டம், ஊட்டியில் நடமாடும் ரேஷன் கடையை அமைச்சர் ராமசந்திரன் துவக்கி வைத்த பின், நிருபர்களிடம் கூறியதாவது:மாநிலத்தின் வனப்பரப்பை, 33 சதவீதம் உயர்த்த முதற்கட்டமாக, ஐந்து கோடி மரங்கள் நட

ஊட்டி:''தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம், இன்னும் இரண்டு ஆண்டுகளில் லாபத்தில் இயங்கும் வகையில் நவீனப்படுத்தப்படும்,'' என, வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்தார்.நீலகிரி மாவட்டம், ஊட்டியில் நடமாடும் ரேஷன் கடையை அமைச்சர் ராமசந்திரன் துவக்கி வைத்த பின், நிருபர்களிடம் கூறியதாவது:மாநிலத்தின் வனப்பரப்பை, 33 சதவீதம் உயர்த்த முதற்கட்டமாக, ஐந்து கோடி மரங்கள் நட திட்டமிடப்பட்டுள்ளது. காட்டு தீ மற்றும் வனக்குற்றங்களை தடுக்க கூடுதலான எண்ணிக்கையில் வேட்டை தடுப்பு காவலர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். நீலகிரி, வால்பாறையில், தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்தின் கீழ் இயங்கும் தேயிலை தொழிற்சாலைகளில் (டான்டீ), அ.தி.மு.க., ஆட்சியின்போது நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் லாபத்தில் இயங்கும் வகையில் நவீனப்படுத்தப்படுகிறது.விலங்குகளுக்கு 'ஆந்த்ராக்ஸ்' நோயை கட்டுப்படுத்த உயர்மட்ட மருத்துவ குழு ஏற்படுத்தப்படும். இவ்வாறு, ராமசந்திரன் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaiyapuri Rajendran - Chennai,இந்தியா
22-ஆக-202107:49:59 IST Report Abuse
Vaiyapuri Rajendran இது போல தொழில் துறை அமைச்சர் தமிழ் நாட்டில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் நலிவடைந்து உள்ளதை புனரமைத்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X