பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் இரு நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை

Updated : ஆக 22, 2021 | Added : ஆக 22, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை : ''தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்றும், நாளையும், இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும்,'' என, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.அவரது பேட்டி:தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், அனேக இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.கடலுார், சென்னை, காஞ்சி புரம், வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, சேலம்,

சென்னை : ''தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்றும், நாளையும், இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும்,'' என, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.



latest tamil news




அவரது பேட்டி:தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், அனேக இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.கடலுார், சென்னை, காஞ்சி புரம், வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, தென்காசி, திண்டுக்கல், மதுரை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும்.

நாளை, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல், மிதமான மழை; திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, வேலுார், ராணிப்பேட்டை, திருவள்ளூர், நீலகிரி, கோவை, கரூர், ஈரோடு மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.நகரின் ஒரு சில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்; அவ்வப்போது கன மழையும் பெய்யலாம்.


latest tamil news




கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, சேலம் மாவட்டம், ஏற்காடு; திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் தலா, 10 செ.மீ., மழை பெய்துள்ளது.திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தில் 9; செங்கத்தில் 8; ஈரோடு, விழுப்புரம் - மயிலம்,

திருவள்ளூர் - புழல் பகுதிகளில், தலா 6; சாத்தனுார் அணைக்கட்டு, புதுச்சேரி, கிருஷ்ணகிரி - பெனுகொண்டாபுரம், விழுப்புரம் - மரக்காணம், திருச்சி - பொன்மலை, நீலகிரி - பந்தலுார் பகுதி களில், தலா 5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. எச்சரிக்கை

இன்று முதல், 25ம் தேதி வரை, தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில், பலத்த காற்று மணிக்கு 40 - 50 கி.மீ., வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
22-ஆக-202108:10:50 IST Report Abuse
Sampath Kumar பேயாட்டம் நல்ல வெளுத்து காட்டட்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X