கொரோனாவால் தந்தையை இழந்த மாணவிகள்: கைகொடுத்த வேளாண் பல்கலை முன்னாள் மாணவர்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவால் தந்தையை இழந்த மாணவிகள்: கைகொடுத்த வேளாண் பல்கலை முன்னாள் மாணவர்கள்

Updated : ஆக 22, 2021 | Added : ஆக 22, 2021
Share
கோவை: கொரோனாவால் தந்தையை இழந்த பள்ளி மாணவிகள் ஐந்து பேரின் கல்வி செலவை, வேளாண் பல்கலை முன்னாள் மாணவர்கள் ஏற்று கொண்டனர்.கோவை வேளாண் பல்கலையில், 1988-92ம் ஆண்டு இளங்கலை பட்டம் படித்த முன்னாள் மாணவர்கள் தற்போது பல்வேறு துறைகளில் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். இவர்கள் ஒன்றிணைந்து, 'தோழா-தோழி' என்ற ஒரு குழுவை உருவாக்கினர். இந்த குழு உறுப்பினர்கள், 2015ம் ஆண்டு சென்னை
 கொரோனாவால் தந்தையை இழந்த மாணவிகள்: கைகொடுத்த வேளாண் பல்கலை முன்னாள் மாணவர்கள்

கோவை: கொரோனாவால் தந்தையை இழந்த பள்ளி மாணவிகள் ஐந்து பேரின் கல்வி செலவை, வேளாண் பல்கலை முன்னாள் மாணவர்கள் ஏற்று கொண்டனர்.
கோவை வேளாண் பல்கலையில், 1988-92ம் ஆண்டு இளங்கலை பட்டம் படித்த முன்னாள் மாணவர்கள் தற்போது பல்வேறு துறைகளில் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். இவர்கள் ஒன்றிணைந்து, 'தோழா-தோழி' என்ற ஒரு குழுவை உருவாக்கினர். இந்த குழு உறுப்பினர்கள், 2015ம் ஆண்டு சென்னை வெள்ளத்தின்போது, 75 குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டினர். கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட, 11 குடும்பங்களுக்கு உதவி செய்தனர்.

தற்போது கொரோனா காரணமாக தந்தையை இழந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த, ஐந்து பள்ளி மாணவிகளின் கல்வி செலவை முன்னாள் மாணவர்கள் ஏற்றுள்ளனர்.இந்த நிகழ்ச்சி நேற்று கோவை, ஜென்னி கிளப்பில் நடந்தது. இதில், மாணவிகளின் கல்வி செலவுக்காக தலா ஒரு லட்சம் ரூபாய் வைப்புத்தொகை, வங்கியில் செலுத்தப்பட்டதற்கான வைப்பு பத்திரம் வழங்கப்பட்டது.

வேளாண் பல்கலை முன்னாள் மாணவரும், தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.,யுமான தினகரன் பேசியதாவது: கொரோனா காலத்தில் பலரும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வரும் நிலையில், யாரும் கல்வியை தொலைத்துவிட கூடாது என்று முடிவு செய்தோம். பெண்களுக்கு கல்வி என்பது ஒரு ஆயுதம் போன்றது. ஒரு பெண் படித்தால், அந்த குடும்பமே பயனடையும்.இதை கருத்தில் கொண்டு, இன்று ஐந்து பெண் குழந்தைகளின் கல்வி செலவை எங்கள் குழு ஏற்றுள்ளது. படிப்பு ஒன்றே மூச்சாக இருந்தால் முன்னேறிவிடலாம். எங்களை போல் பலரும் இதுபோன்று சமுதாய பணிகளில் ஈடுபட்டு வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், முன்னாள் மாணவர்கள், பேராசிரியர்கள், குடும்ப உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


படித்து முன்னேறுவோம்!



கொரோனாவால் தந்தையை இழந்த துாத்துக்குடியை சேர்ந்த அஸ்விதா, 14, திண்டுக்கல்லை சேர்ந்த ஐஸ்வர்யா, 15, திருநெல்வேலியை சேர்ந்த ஹர்சினி, 11, திருப்பத்துாரை சேர்ந்த துாக்சிதா, 14, திருவாரூரை சேர்ந்த சாருமதி, 9 ஆகிய ஐந்து பள்ளி மாணவிகள் தங்களின் உறவினர்களுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மாணவியர் பேசுகையில், 'வாழ்வின் இக்கட்டான சூழலில் எங்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ள உங்களை என்றும் மறக்க மாட்டோம். அதேபோன்று இந்த உதவியை பயன்படுத்தி, நன்று படித்து வாழ்வில் பெரிய அளவில் முன்னேறி சாதிப்போம்' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X