பொது செய்தி

தமிழ்நாடு

'புஸ்ஸி ஆனந்த் மிரட்டுகிறார்' : விஜய் ரசிகர்கள் புகார்

Added : ஆக 22, 2021
Share
Advertisement
சென்னை : 'விஜய் மக்கள் இயக்கத்தில் நடக்கும் உண்மை நிலவரம், விஜய்க்கு தெரிவதில்லை. கடைக்கோடி ரசிகர்கள் புறக்கணிக்கப் படுகின்றனர்' என, திருச்சி மாவட்ட விஜய் ரசிகர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.நடிகர் விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலராக புஸ்ஸி ஆனந்த் உள்ளார். இவர் மீது, திருச்சி மாவட்ட விஜய் மக்கள் இயக்க ரசிகர்கள் சிலர், புகார் தெரிவித்துள்ளனர்.விஜய் ரசிகர் மன்ற
 'புஸ்ஸி ஆனந்த் மிரட்டுகிறார்' : விஜய் ரசிகர்கள் புகார்


சென்னை : 'விஜய் மக்கள் இயக்கத்தில் நடக்கும் உண்மை நிலவரம், விஜய்க்கு தெரிவதில்லை. கடைக்கோடி ரசிகர்கள் புறக்கணிக்கப் படுகின்றனர்' என, திருச்சி மாவட்ட விஜய் ரசிகர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

நடிகர் விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலராக புஸ்ஸி ஆனந்த் உள்ளார். இவர் மீது, திருச்சி மாவட்ட விஜய் மக்கள் இயக்க ரசிகர்கள் சிலர், புகார் தெரிவித்துள்ளனர்.விஜய் ரசிகர் மன்ற முன்னாள் செயலர் பாரதிராஜா கூறியதாவது:

விஜய் பெயரில், கிளை இயக்க பதிவு எண் வைத்து, எந்த நலத் திட்டமும் செயல்படுத்த, புஸ்ஸி ஆனந்த் தடையாக உள்ளார். மீறி செய்தால் மிரட்டுகிறார். திருச்சி மட்டுமல்லாது புதுச்சேரியிலும், இதே நிலை தான்.ஐந்து ஆண்டுகளாக விஜய், எந்த மன்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாததற்கு இவரே காரணம். மூத்த நிர்வாகிகளை, எந்த ஒரு நலத் திட்ட உதவிகளையும் செய்ய விடாமல் தடுக்கிறார். கடைக்கோடி ரசிகர்கள் புறக்கணிக்கப் படுகின்றனர்.நாளை, திருச்சி வரும் புஸ்ஸி ஆனந்துக்கு கறுப்பு கொடி காட்ட உள்ளோம். மக்கள் இயக்கத்தில் நடக்கும் உண்மை நிலவரம், விஜய்க்கு தெரிவதில்லை.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X