பொது செய்தி

தமிழ்நாடு

அரசு கட்டடங்களின் தரம் மாநிலம் முழுதும் ஆய்வு

Added : ஆக 22, 2021
Share
Advertisement
சென்னை : தமிழகம் முழுதும், அ.தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்ட, அரசு கட்டடங்களின் தரத்தை ஆய்வு செய்யும் பணி துவக்கப்பட்டுள்ளது.சென்னை, புளியந்தோப்பு, கேசவப்பிள்ளை திட்டப் பகுதியில், குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட, ஒன்பது மாடி கட்டடத்தில், பணி முடிந்து ஓராண்டுக்குள், சுவர் பூச்சு உதிர்ந்து விழுந்தது. இக்கட்டடம், ஒரே ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.இதன் தரம்



சென்னை : தமிழகம் முழுதும், அ.தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்ட, அரசு கட்டடங்களின் தரத்தை ஆய்வு செய்யும் பணி துவக்கப்பட்டுள்ளது.
சென்னை, புளியந்தோப்பு, கேசவப்பிள்ளை திட்டப் பகுதியில், குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட, ஒன்பது மாடி கட்டடத்தில், பணி முடிந்து ஓராண்டுக்குள், சுவர் பூச்சு உதிர்ந்து விழுந்தது. இக்கட்டடம், ஒரே ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.இதன் தரம் மற்றும் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய, உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான, சென்னை ஐ.ஐ.டி.,க்கு, அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இக்கட்டடத்தை தொடர்ந்து, தமிழகம் முழுதும் கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட, அனைத்து அரசு கட்டடங்களின் தரத்தையும் ஆய்வு செய்ய, அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, சென்னை ஐ.ஐ.டி., மற்றும் அண்ணா பல்கலை சார்பில், தர கட்டுப்பாட்டு குழுக்கள் ஏற்படுத்தி, அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பப்படும். அக்குழுக்கள் அளிக்கும் அறிக்கை அடிப்படையில், யார் தவறு செய்திருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, அரசு முடிவு செய்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக, இரண்டு நாட்களாக, அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட கலெக்டர்கள், எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் பகுதிகளில், அ.தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்ட கட்டடங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.உளவுத் துறையினரும், சேதமடைந்துள்ள கட்டடங்கள் மற்றும் அவற்றை கட்டிய ஒப்பந்ததாரர்கள் குறித்த விபரங்களை சேகரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X