பொது செய்தி

இந்தியா

நிலச்சரிவை தடுக்க முடியுமா

Updated : ஆக 22, 2021 | Added : ஆக 22, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
நிலச்சரிவை முன் கூட்டியே கணித்து எச்சரிக்கும் தொழில் நுட்பத்தை கண்டறியும் முயற்சி யில் இந்திய விஞ்ஞானிகள் ஈடுபட் டுள்ளனர்.நிலச்சரிவு என்பது இயற்கை அல்லது மனித நடவடிக்கை காரணமாக மண், பாறை பகுதிகள் வேகமாக கீழ்நோக்கி சரிவதை குறிக்கிறது. புயல், காற்று, வெள்ளம், எரிமலை, பூகம்பத்தின் விளைவாக ஏற்படுகிறது. இந்தியாவில் சமீபத்தில் கேரளாவின் இடுக்கி, இமாச்சல பிரதேசத்தின்
நிலச்சரிவு, விஞ்ஞானிகள், இந்தியா

நிலச்சரிவை முன் கூட்டியே கணித்து எச்சரிக்கும் தொழில் நுட்பத்தை கண்டறியும் முயற்சி யில் இந்திய விஞ்ஞானிகள் ஈடுபட் டுள்ளனர்.
நிலச்சரிவு என்பது இயற்கை அல்லது மனித நடவடிக்கை காரணமாக மண், பாறை பகுதிகள் வேகமாக கீழ்நோக்கி சரிவதை குறிக்கிறது. புயல், காற்று, வெள்ளம், எரிமலை, பூகம்பத்தின் விளைவாக ஏற்படுகிறது. இந்தியாவில் சமீபத்தில் கேரளாவின் இடுக்கி, இமாச்சல பிரதேசத்தின் கன்னனுார் மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 65 பேர் பலியாகினர். அங்கு மட்டுமல்லாமல் மழைக்காலம் வந்து விட்டால் நாட்டின் பல பகுதிகளில் மலைப் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படுவது வழக்கம். இதனால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் நிலச்சரிவு ஏற்படுவதை முன் கூட்டியே கணித்து எச்சரிக்கும் தொழில்நுட்பத்தை கண்டறியும் முயற்சியில் இந்திய புவியியல் ஆய்வு மையம் (ஜி.எஸ்.ஐ.,) ஈடுபட்டுள்ளது. இது 2025ல் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. புயல் வருவது குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாக்கப்படுகிறது.


latest tamil newsநிலச்சரிவு ஏற்படும் வாய்ப்புள்ள பகுதியை தெரிவித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்கு எச்சரிக்கை தக வலை அனுப்புவதே இதன் நோக்கம். மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகம், இந்திய வானிலை கழகம், இஸ்ரோ, நிலச்சரிவு தொடர்பான ஐரோப்பிய மையம் ஆகியவற்றுடன் இணைந்து ஜி.எஸ்.ஐ., விஞ்ஞானிகள் மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங், தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் சோதனை முறையில் இதற்கான ஆய்வு நடைபெற்று வருகிறது.
தரமான துல்லிய எச்சரிக்கை தொழில் நுட்பத்தை சோதித்து உருவாக்குவதற்கு 8 முதல் 10 ஆண்டுகள் ஆகும் என சர்வதேச விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 10 ஆண்டு என்பது இந்தியாவுக்கு நீண்ட காலம். குறைந்தது 10 மாநிலங்களில் 10 இடங்களிலாவது வரும் 2025ம் ஆண்டுக்குள் நிறுவ வேண்டும் என ஜி.எஸ்.ஐ., இலக்கு நிர்ணயித்துள்ளது.


26 நாடுகளில்


உலகில் அமெரிக்கா, தைவான், ஹாங்காங்,இத்தாலி, பிரிட்டன் உட்பட 26 நாடுகளில் ஏற்கனவே நிலச்சரிவு எச்சரிக்கை தொழில்நுட்பம் செயல்படுகிறது.


செயல்படும் விதம்


ஏற்கனவே நிலச் சரிவு ஏற்பட்டஇடம், அப்பகுதியின் மழைப்பொழிவு அளவு ஆகியவற்றில் இருந்து தரவு களை பெற்று இத் தொழில் நுட்ப ஆய்வு நடக்கிறது. இந்தியாவில் 80 சதவீத நிலச்சரிவு மழைப் பொழிவு காரணமாக ஏற்படுகிறது என ஜி.எஸ்.ஐ., தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-ஆக-202118:54:19 IST Report Abuse
Ananth.   madurai நிலச்சரிவை தடுப்பதற்கு எனக்கு தெரில ஆனா எனக்கு தெரிந்த ஒன்றை கூறுகிறேன் நான் சொல்ரத சரியாக இருந்தால் பிண்பற்றலாம் முதலில் நிலச்சரிவுக்கு காரணம் போதுமான புடிமானம் அங்கே குறைவாக இருக்கும் ஆக புடிமானம் குறைவான சாலை ஓரங்களில் எளிதில் வலயாத மிகப்பெரிய கம்பிகளை அங்கு ஆழமாக நட்டு மேலும் மேல் பரப்பில் ஆபத்து விளைவிக்காமல் பாதுகாக்க உதவும் பொருத்தி விட்டால் மண் சரியும் தருவாயில் இருந்து பெரிய ஆபத்துகளில் இருந்து மீட்கலாம் No2..இரும்பால் ஆன சிறு சல்லடை போன்ற வலைகளை சரியாத வண்ணம் கட்டமைக்கலாம் No3 ஆழமாக வேர் இடும் மரங்களை நடலாம் நன்றி
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
22-ஆக-202117:07:34 IST Report Abuse
Natarajan Ramanathan லட்சக்கணக்கில் மரம் நடுவது ஒன்றே வழி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X