பொது செய்தி

இந்தியா

கவர்னராகிறார் இல.கணேசன்; முழு வாழ்க்கை வரலாறு

Updated : ஆக 22, 2021 | Added : ஆக 22, 2021 | கருத்துகள் (119)
Share
Advertisement
புதுடில்லி: மணிப்பூர் கவர்னராக பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசனை நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்து உள்ளார். அவருக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.மணிப்பூர் கவர்னராக இருந்த நஜ்மா ஹெப்துல்லாவின் பதவிக்காலம் கடந்த 20ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதனையடுத்து, சிக்கிம் கவர்னர் கங்கா பிரசாத் கூடுதல் பொறுப்பாக மணிப்பூர் கவர்னர் பதவி
manipur, governor, Ila.ganesan, LA GANESAN, மணிப்பூர், கவர்னர், இல.கணேசன்,

புதுடில்லி: மணிப்பூர் கவர்னராக பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசனை நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்து உள்ளார். அவருக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

மணிப்பூர் கவர்னராக இருந்த நஜ்மா ஹெப்துல்லாவின் பதவிக்காலம் கடந்த 20ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதனையடுத்து, சிக்கிம் கவர்னர் கங்கா பிரசாத் கூடுதல் பொறுப்பாக மணிப்பூர் கவர்னர் பதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில், பாஜ., மூத்த தலைவர் இல.கணேசன் மணிப்பூர் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார்.


latest tamil news
பெருமை

கவர்னராக நியமனம் செய்யப்பட்டது குறித்து இல.கணேசன் கூறுகையில், எனது சேவை அங்கீகரிக்கப்பட்டது குறித்து மிகவும் பெருமையாக உள்ளது. இந்தியாவில், எந்த இடத்திலும் பணிபுரிவதற்கு தயாராக உள்ளேன். எனது அனுபவம் மூலம், ஒட்டு மொத்த இந்தியாவும் ஒன்றே. இவ்வாறு அவர் கூறினார்.ஆர்.எஸ்.எஸ்.சில் பணியாற்றி தொடர்ந்து பா.ஜ., தேசிய செயலர், துணைத்தலைவர், தமிழக பா.ஜ., தலைவர், ராஜ்யசபா எம்.பி.,என பதவி வகித்தவர் இல.கணேசன்.


தஞ்சையில் பிறந்தவர்


தஞ்சாவூரில் 1945 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16 ஆம் நாள் இலக்குமிராகவன் - அலமேலு தம்பதியின் மகனாகப் பிறந்தார். சிறுவயதில் தந்தையை இழந்ததால் அண்ணன் அரவணைப்பில் வளர்ந்தார். ஆர்எஸ்எஸ் அமைப்பில் ஈடுபாடு கொண்டு திருமணம் செய்யாமலும், தனது வேலையை விட்டுவிட்டும் முழுநேர செயல்பாட்டாளராக பொதுவாழ்விற்கு வந்தார். இவர் தெலுங்கு பிராமண வகுப்பை சேர்த்தவர்.
இவர் பாஜகவின் செயற்குழு உறுப்பினர்களுள் ஒருவர். 1991 இல் பாஜகவின் மாநில அமைப்புச் செயலாளரானார். 2009 மக்களவை தேர்தலிலும், 2014 மக்களவை தேர்தலிலும் தென் சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். பின்னர் மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு, 6 அக்டோபர் 2016 அன்று பதவி ஏற்றுக் கொண்டார்.தலைவர்கள் வாழ்த்து

இல.கணேசனுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஸ்டாலின் வாழ்த்து செய்தியில்

என தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (119)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DESIKACHARI.R - bangalore,இந்தியா
25-ஆக-202116:13:02 IST Report Abuse
DESIKACHARI.R வாழ்த்துக்கள் நண்பர் கணேசன் அவர்களுக்கு. பள்ளி பருவத்திலேயே பொதுஜன சேவையில் ஈடுபட்டு வரும் உங்களுக்கு மீண்டும் வாழ்த்துக்கள் பள்ளி நண்பன் தேசிகன் ,தஞ்சாவூர்
Rate this:
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
23-ஆக-202115:32:59 IST Report Abuse
ganapati sb அருமை பிற மொழி கலப்பில்லாமல் தூய தமிழில் பேசவும் எழுதவும் வல்லவர் நேர்மையான எளிமையான அரசியல் தலைவருக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. திருமணம் புரியாமல் தேச சேவை செய்த இலகணேசன் ஜி அவர்களுக்கு பாராட்டுக்கள் .
Rate this:
Cancel
23-ஆக-202105:01:23 IST Report Abuse
அப்புசாமி அப்பாடா... ரெண்டு கோடி வேலை வாய்ப்பில் இவருக்காவது இப்போ வேலை கிடைச்சுதே... 1945 ல் பிறந்தவர். ரிடையராகிற வயசைத் தாண்டி 10 வருஷத்துக்கும் மேலாக காத்திருந்தார். இது போல நிறைய முதியோர்கள் காத்திருக்கோம் ஐயா...நல்ல வேலை போட்டுக் குடுங்க.
Rate this:
S Bala - London,யுனைடெட் கிங்டம்
24-ஆக-202109:47:03 IST Report Abuse
S Balaஎவனாவது பேனா பிடிக்கிற வேலை கொடுப்பான், ஒரு மேசையின் பின் அமர்ந்து இஷ்டத்துக்கு லஞ்சம் வாங்கலாம் என்று வாயை பிளந்துகொண்டு ஒரு கூட்டம் இருக்கிறது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X