பொது செய்தி

இந்தியா

ஊரக வேலை திட்டத்தில் ரூ.935 கோடி முறைகேடு: தணிக்கையில் திடுக்!

Updated : ஆக 22, 2021 | Added : ஆக 22, 2021 | கருத்துகள் (37)
Share
Advertisement
புதுடில்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அமலாக்கத்தில் ரூ.935 கோடி முறைகேடு நடந்துள்ளதாக மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் நடத்திய தணிக்கையில் திடுக் தகவல் வெளியாகியுள்ளது.மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 2.65 லட்சம் கிராம பஞ்சாயத்துகளில், கடந்த 4 ஆண்டுகால (2017-18 முதல்) ஊரக வேலைதிட்ட அமலாக்கம் பற்றி தணிக்கை நடத்தப்பட்டது. 2017-18ம் நிதி ஆண்டில்
ஊரக வேலை திட்டம், முறைகேடு

புதுடில்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அமலாக்கத்தில் ரூ.935 கோடி முறைகேடு நடந்துள்ளதாக மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் நடத்திய தணிக்கையில் திடுக் தகவல் வெளியாகியுள்ளது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 2.65 லட்சம் கிராம பஞ்சாயத்துகளில், கடந்த 4 ஆண்டுகால (2017-18 முதல்) ஊரக வேலைதிட்ட அமலாக்கம் பற்றி தணிக்கை நடத்தப்பட்டது. 2017-18ம் நிதி ஆண்டில் மத்தியஅரசு இந்த திட்டத்துக்கு ரூ.55,659 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 2020-21ம் நிதி ஆண்டில் ரூ.1,10,355 கோடியாக உயர்ந்துள்ளது.


ஊரக வேலை உறுதி திட்டத்தில் மெகா ஊழல் தமிழகம் முதலிடம்!

latest tamil news



மொத்த நிதி ஒதுக்கீடு அதிகரித்து வந்த நிலையில் ரூ.935 கோடி நிதி முறைகேடு நடைபெற்றுள்ளது தணிக்கையில் தெரியவந்துள்ளது. லஞ்சம் மற்றும் உயிருடன் இல்லாதவர்களுக்கு பணம் அளித்ததாக கணக்கு காட்டியிருப்பது தெரியவந்துள்ளது. இதுதவிர அதிக விலையில் பொருட்களை கொள்முதல் செய்ததும் தெரியவந்துள்ளது. இதில், ரூ.12.5 கோடி அளவிலான தொகை மட்டுமே வசூலாகியுள்ளது. இது மொத்த தொகையில் 1.34% ஆகும்.

தமிழகத்தில் மிக அதிகளவாக ரூ.245 கோடி முறைகேடு நடந்துள்ளது. இதில், 0.85% தொகை அதாவது ரூ.2.07 கோடி மட்டுமே திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தணிக்கையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டும், 2 பேர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
23-ஆக-202111:57:19 IST Report Abuse
Krishnamurthy Venkatesan இந்த தேவையற்ற திட்டத்தால் பண செலவே அன்றி எந்த ஒரு (சொல்லிக்கொள்ளும்படியான) தரமான, அத்தியாவசியமான வேலைகளும் நடப்பதில்லை என்பது தான் உண்மை.
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
23-ஆக-202111:48:02 IST Report Abuse
vpurushothaman ஊழல் இல்லாத துறைக்கு நோபல் பரிசு கொடுக்கலாம். ஊழல் தங்கப் பரிசு தமிழகத்துக்கு நிரந்தரம். எதிலேதான் இல்லை - எங்கேதானில்லை. சாகா வரம்பெற்ற ஊழலே நீ என்று.......?
Rate this:
Cancel
John Miller - Hamilton,பெர்முடா
23-ஆக-202105:39:52 IST Report Abuse
John Miller மத்திய அரசினால் அறிவிக்க பட்டு மாநிலங்களால் நிறைவேற்றப்படும் அணைத்து திட்டம்களும் ஊழல் நிறைந்ததுதான். (அனைவருக்கும் வீடு, பசுமை வீடுகள், சரக்கு கிட்டங்கைகள், விஷசாயிகளுக்கு வருமானம் என பலவற்றை சொல்லலாம்.)
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X