சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஷிப்பிங் கம்பெனி உரிமையாளர் கொலையில் 4 பேருக்கு ‛குண்டாஸ்'

Added : ஆக 22, 2021
Share
Advertisement
தூத்துக்குடி: தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஷிப்பிங் கம்பெனி உரிமையாளரை கொலை செய்த வழக்கில் சம்மந்தப்பட்ட 4 பேரை ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து மாவட்ட போலீஸ் எஸ்.பி., ஜெயக்குமார் நடவடிக்கை எடுத்துள்ளார்.கடந்த 06.08.2021 அன்று தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலசண்முகபுரம் வண்ணார் தெருவைச் சேர்ந்த

தூத்துக்குடி: தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஷிப்பிங் கம்பெனி உரிமையாளரை கொலை செய்த வழக்கில் சம்மந்தப்பட்ட 4 பேரை ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து மாவட்ட போலீஸ் எஸ்.பி., ஜெயக்குமார் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கடந்த 06.08.2021 அன்று தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலசண்முகபுரம் வண்ணார் தெருவைச் சேர்ந்த மனோகரன் மகன் நடராஜன் (38) என்பவரை தூத்துக்குடி ராமசாமிபுரத்தில் உள்ள அவரது ஷிப்பிங் கம்பெனி முன் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார்.
இவ்வழக்கில் தூத்துக்குடி தாமோதர நகரைச் சேர்ந்த தங்கதுரை மகன் தங்ககார்த்திக் (எ) ஆடு கார்த்திக் (எ) கார்த்திக் (25), தூத்துக்குடி சிவந்தாகுளம் ரோடு பகுதியைச் சேர்ந்த சூசை இருதய செல்வம் மகன் அந்தோணி முத்து (எ) அந்தோணி பிச்சை (21), தூத்துக்குடி பெருமாள்புரத்தைச் சேர்ந்த சௌந்திரபாண்டியன் மகன் அருண்குமார் (எ) அஜித்குமார் (எ) அஜித் (22) மற்றும் தூத்துக்குடி தாமோதரநகர் பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் மாரிமுத்து (21) ஆகிய 4 பேரையும் தென்பாகம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கில் எதிரிகளான 4 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமாரிடம் அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையின் படி, எஸ்.பி., ஜெயக்குமார் தூத்துக்குடி மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில், கலெக்டர் செந்தில் ராஜ், தூத்துக்குடியைச் சேர்ந்த கார்த்திக் (25), அந்தோணி பிச்சை (21), அஜித் (22) மற்றும் மாரிமுத்து (21) ஆகிய 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில், தென்பாகம் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் மேற்படி எதிரிகள் 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து திருநெல்வேலி சிறையில் அடைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X