ஆப்கனில் இருந்து 5 நாட்களில் 2 ஆயிரம் அழைப்புகள்

Updated : ஆக 22, 2021 | Added : ஆக 22, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
காபூல்: தலிபான் பிடியில் உள்ள காபூலில் இருந்து 107 இந்தியர்கள் உள்ளிட்ட 168 பேருடன், இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம், டில்லி அருகே உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் தரையிறங்கியது. அங்கிருந்து உதவி கேட்டு 5 நாட்களில் 2 ஆயிரம் அழைப்புகள் வந்துள்ளதாக மத்திய அரசு வட்டாரம் தெரிவிக்கிறது.ஆப்கானிஸ்தான் ஆட்சி அதிகாரம் முழுமையாக தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்ததை
ஆப்கன், இந்தியர்கள், மீட்பு, விமானப்படை

காபூல்: தலிபான் பிடியில் உள்ள காபூலில் இருந்து 107 இந்தியர்கள் உள்ளிட்ட 168 பேருடன், இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம், டில்லி அருகே உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் தரையிறங்கியது. அங்கிருந்து உதவி கேட்டு 5 நாட்களில் 2 ஆயிரம் அழைப்புகள் வந்துள்ளதாக மத்திய அரசு வட்டாரம் தெரிவிக்கிறது.

ஆப்கானிஸ்தான் ஆட்சி அதிகாரம் முழுமையாக தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்ததை தொடர்ந்து, உயிருக்கு அஞ்சி, மக்கள் வெளியேறி வருகின்றனர். இதனால் காபூல் விமான நிலையத்தில் பதற்றம் நிலவி வருகிறது. விமான சக்கரத்தை பிடித்து பயணம் செய்ய முயன்ற 3 பேர் கீழே விழுந்து உயிரிழந்தனர்.


7 பேர் பலி


இந்நிலையில், காபூல் விமான நிலையத்தில் மக்கள் கூடியிருந்த நிலையில், தலிபான்கள் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்ததாக பிரிட்டன் ராணுவம் தெரிவித்து உள்ளது.


இந்தியர்கள் மீட்பு


ஆப்கனில் சிக்கியுள்ள அனைத்து இந்தியர்களையும் பத்திரமாக அழைத்து வர மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது. தூதரகத்தில் பணியாற்றிய 200 இந்தியர்கள் சமீபத்தில் பத்திரமாக நாடு திரும்பினர். காபூலில் உள்ள குருத்வாராவில் 200 சீக்கியர்கள் அடைக்கலம் புகுந்தனர்.



இந்நிலையில், காபூலில் இருந்து 168 பேருடன் விமானப்படைக்கு சொந்தமான சிறப்பு விமானம் இன்று டில்லி அருகே உள்ள விமானப்படை தளத்திற்கு வந்தது. மீட்கப்பட்டவர்களில் 2 பேர் ஆப்கன் எம்.பி.,க்கள் மற்றும் 24 பேர் ஆப்கனை சேர்ந்த சீக்கியர்கள். இவர்கள், காபூலில் உள்ள குருத்வாராவில் தஞ்சமடைந்தவர்கள் ஆவார்கள்.


latest tamil news






முன்னதாக, ஆப்கனில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்களுடன் ஏர் இந்தியா, விஸ்தாரா, மற்றும் இண்டிகோ விமானங்களும் டில்லியில் தரையிறங்கின. இந்த விமானங்கள், காபூலில் 87 இந்தியர்கள் மற்றும் 2 நேபாளிகளை ஏற்றி கொண்ட, இந்திய விமானப்படை விமானம் தஜகிஸ்தான் தலைநகர் துஷான்பேவில் தரையிறங்கியது. அங்கு எரிபொருள் நிரப்பிய பின்னர், அங்கிருந்து கிளம்பி டில்லி வந்தடைந்தது. விமானத்தில் பயணித்தவர்கள், ‛பாரத் மாதாகி ஜே' என கோஷம் எழுப்பினர்.



மற்றொரு விமானம் கத்தாரின் தோஹாவில் தரையிறங்கியது. தொடர்ந்து அங்கிருந்து கிளம்பி டில்லி வந்தது.
ஆப்கனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கு தினமும் காபூலில் இருந்து இரண்டு விமானங்களை இயக்கி கொள்வதற்கு, காபூல் விமான நிலையத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள நேடோ படைகள் இந்தியாவிற்கு அனுமதி வழங்கி உள்ளது.




2 ஆயிரம் அழைப்புகள்


மத்திய வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், ஆப்கனில் இந்தியர்களை மீட்பது தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு பிரிவிற்கு கடந்த 5 நாட்களில் 2 ஆயிரம் அழைப்புகள் வந்துள்ளன. வாட்ஸ் ஆப் மூலம் வந்த 6 ஆயிரம் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இமெயில் அனுப்பிய 1,200 பேருக்கு பதில் அளிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajan - Coimbatore,இந்தியா
23-ஆக-202101:45:13 IST Report Abuse
Rajan இந்தியர்களை மட்டுமே அழைத்துவரவேண்டும், இந்தியர்கள் மட்டும் பாரத் மாதாகி ஜே என்று கோஷமிட்டு கண்டவர்கள் இந்தியாவிக்குள் புகுந்துவிடுவார்கள். நாளை நமக்குத்தான் ஆபத்து. இவர்களிடம் விரலை காட்டினால் கையை எடுத்து விடுவார்கள். ஏற்கனவே பங்களாதேசிகளின் ஊடுருவல் ஆபத்தாக உள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X