பொது செய்தி

இந்தியா

வருமான வரித்துறை இணையதளத்தில் கோளாறு: இன்போசிஸ் சி.இ.ஓ.,வுக்கு சம்மன்

Updated : ஆக 22, 2021 | Added : ஆக 22, 2021 | கருத்துகள் (33)
Share
Advertisement
புதுடில்லி: வருமான வரித்துறை இணையதளத்தில் உள்ள கோளாறுகள் சரி செய்யாதது குறித்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் விளக்கம் அளிக்கும்படி அதனை வடிவமைத்த இன்போசிஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ., நாளை விளக்கம் அளிக்கும்படி மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.வருமான வரித்துறையின் இணையதளம் மறுசீரமைக்கப்பட்டு கடந்த ஜூன் 7 ம் தேதி துவக்கி வைக்கப்பட்டது. அந்த இணையதளத்தை
Infosys, incometax, summon, Financeministry, financeminister, portal,

புதுடில்லி: வருமான வரித்துறை இணையதளத்தில் உள்ள கோளாறுகள் சரி செய்யாதது குறித்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் விளக்கம் அளிக்கும்படி அதனை வடிவமைத்த இன்போசிஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ., நாளை விளக்கம் அளிக்கும்படி மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.

வருமான வரித்துறையின் இணையதளம் மறுசீரமைக்கப்பட்டு கடந்த ஜூன் 7 ம் தேதி துவக்கி வைக்கப்பட்டது. அந்த இணையதளத்தை இன்போசிஸ் நிறுவனம் மறுவடிவமைத்திருந்தது. இருப்பினும், அதில் பல கோளாறுகள் ஏற்பட்டன. இது குறித்து பயனாளர்கள், புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். சுயவிவரத்தில் கூடுதல் விவரங்கள் சேர்த்தல், கடவுச்சொல் மாற்றுதல் ஆகியவற்றில் சிக்கலை சந்தித்ததாகவும், இணையதளம் மெதுவாக செயல்படுவதகவும் கூறியிருந்தனர்.

இது குறித்து, இன்போசிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த நந்தன் நீலகேணி கவலை தெரிவித்ததுடன் கோளாறு சரி செய்யப்படும் என்று கூறியிருந்தார். மத்திய அரசும், அனைத்தும் சரி செய்யப்படும் எனக்கூறியதுடன், இணையதளத்தை பயனாளர்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க இன்போசிஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. இருப்பினும், தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.


latest tamil news


இந்நிலையில் வருமான வரித்துறை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: வருமான வரித்துறையின் இணையதளம் புதுப்பிக்கப்பட்டு 2.5 மாதங்கள் ஆகியும், கோளாறுகள் இன்னும் சரி செய்யாதது ஏன்? என்பது குறித்து நாளை மத்திய நிதியமைச்சரிடம் விளக்கம் அளிக்கும்படி இன்போசிஸ் சி.இ.ஓ. ஷலீல் பரேக்கிற்கு மத்திய நிதியமைச்சகம் சம்மன் அனுப்பி உள்ளது. நேற்று(ஆக.,21) முதல் வருமான வரித்துறை இணையதளம் கிடைக்கவில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
babu - Nellai,இந்தியா
23-ஆக-202111:02:18 IST Report Abuse
babu உயர் அதிகாரிகள் உதவியுடன் சென்னை, பெங்களூர் போன்ற பெருநகரங்களில் வேலை பார்த்த மாதிரி வெறும் வெறும் பொய் சர்டிபிகேட், பல லட்சங்கள் கொடுத்து நேர்முக தேர்வு இல்லாமல் வேலைக்கு சேர்த்தால் இப்படி தான் வேலை செய்வார்கள் போலியான வேலைக்காரர்கள் .
Rate this:
Cancel
Kanthan Iyengaar - Sydney,ஆஸ்திரேலியா
23-ஆக-202110:43:34 IST Report Abuse
Kanthan Iyengaar இந்த ஒரு விஷயத்துக்கு வேற நாடா இருந்தா அமைச்சர் சீட்ட கிழித்திருப்பா
Rate this:
Cancel
Kanthan Iyengaar - Sydney,ஆஸ்திரேலியா
23-ஆக-202110:42:05 IST Report Abuse
Kanthan Iyengaar நேரடி வரி வாரியத்துக்கு இதில் பொறுப்பே இல்லயா? அவா சம்மதம் இல்லாம தான் நடைமுறைப்படுத்தினாலா? சம்மதிச்ச IRS அதிகாரி ஒருத்தர் கூயோட இல்லயா? revenue secretary அலுவலகத்துல இதுக்கு சம்மதம் வாங்கினார்களா? ஒரு IAS அதிகாரி கூட அந்த கோப்பில் கையெழுத்து போடவில்லையா? 4500 கோடி செலவுல ஒரு மென்பொருளை தறிக்கிறா.. அது சரியா செயல்படுதான்னுட்டு அமுல் செய்யற முன்னே தெரிஞ்சிக்கிற கடமை அமைச்சருக்கு இல்லையா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X