அரசியல் செய்தி

தமிழ்நாடு

ராணிப்பேட்டை அ.தி.மு.க.,வினர் 5,000 பேர் தி.மு.க.,வில் ஐக்கியம்

Added : ஆக 22, 2021
Share
Advertisement
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க.,வினர் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஆற்காடு சாரதி தலைமையில் 5,000 பேர் சென்னை அண்ணா அறிவாயலத்தில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர்.கொரோனா பரவல் காரணமாக 100 பேருக்கு மட்டும் முதல்வர் ஸ்டாலின் சால்வை அணிவித்து வரவேற்றார். அமைச்சர்கள் துரைமுருகன், காந்தி, வேலு, வேலுார் மத்திய மாவட்ட செயலாளர்
ராணிப்பேட்டை அ.தி.மு.க.,வினர் 5,000 பேர் தி.மு.க.,வில் ஐக்கியம்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க.,வினர் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஆற்காடு சாரதி தலைமையில் 5,000 பேர் சென்னை அண்ணா அறிவாயலத்தில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர்.
கொரோனா பரவல் காரணமாக 100 பேருக்கு மட்டும் முதல்வர் ஸ்டாலின் சால்வை அணிவித்து வரவேற்றார். அமைச்சர்கள் துரைமுருகன், காந்தி, வேலு, வேலுார் மத்திய மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ., எம்.பி.,க்கள் பாலு, ராசா, பாரதி, ஜெகத்ரட்சகன் பங்கேற்றனர்.
இதுகுறித்து தி.மு.க.,வில் இணைந்த ஆற்காடு சாரதி கூறியதாவது: நான் 1994ம் ஆண்டு முதல் அ.தி.மு.க.,வில் இருந்தேன். தற்போது அ.தி.மு.க.,வில் சரியான தலைமை இல்லை. தொண்டர்களை அரவணைத்துப் போகும் தலைவர்கள் இல்லை. கட்சியில் நன்றாக உழைக்கக் கூடிய நிர்வாகிகளை முன்னாள் அமைச்சர் வீரமணி மதிப்பதில்லை. இது போன்ற பிரச்சனைகளால் என்னை போல நிறைய பேர் அதிருப்தியடைந்ததால், தி.மு.க.,வில் இணைந்தோம். அ.தி.மு.க.,வில் உள்ள ஏராளமானோர் தி.மு.க.,வில் விரைவில் இணைய உள்ளனர். இதனால் உள்ளாட்சி தேர்தலுக்குள் ராணிப்பேட்டை மாவட்டத்தில், அ.தி.மு.க., கூடாரம் காலியாகிவிடும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X