சம்பவம் செய்தி

தமிழ்நாடு

10 செயற்கை மணல் தொட்டிகள்: போலீசார் அகற்றம்

Added : ஆக 22, 2021
Share
Advertisement
திருப்பத்துார்: திருப்பத்துார் அருகே, 10 செயற்கை மணல் தயாரிக்கும் தொட்டிகளை போலீசார் முன்னிலையில் இடித்து அகற்றப்பட்டது.திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே சொத்தமலையைச் சேர்ந்த ஹரி 14, பழையபேட்டையைச் சேர்ந்த தனுஷ்ராஜ் 13, ஆகியோர் கடந்த 20ம் தேதி செட்டேரி டேம் அருகே உள்ள தண்ணீரில் குளித்த போது மின்சாரம் பாய்ந்து இருவரும் இறந்தனர்.போலீசார் நடத்திய விசாரணையில்,
10 செயற்கை மணல் தொட்டிகள்: போலீசார் அகற்றம்

திருப்பத்துார்: திருப்பத்துார் அருகே, 10 செயற்கை மணல் தயாரிக்கும் தொட்டிகளை போலீசார் முன்னிலையில் இடித்து அகற்றப்பட்டது.
திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே சொத்தமலையைச் சேர்ந்த ஹரி 14, பழையபேட்டையைச் சேர்ந்த தனுஷ்ராஜ் 13, ஆகியோர் கடந்த 20ம் தேதி செட்டேரி டேம் அருகே உள்ள தண்ணீரில் குளித்த போது மின்சாரம் பாய்ந்து இருவரும் இறந்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், குனிச்சியூரைச் சேர்ந்த பார்த்திபன், தொட்டி அமைத்து முறைகேடாக செயற்கை மணல் தயாரித்து வந்துள்ளதும் இதற்காக, மின் கம்பத்தில் கொக்கி போட்டு திருட்டுத்தனமாக மின்சாரத்தை திருடி வந்ததும், மின் கம்பி அறுந்து விழுந்தால் மின்சாரம் தாக்கி சிறுவர்கள் இறந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து நாட்றம்பள்ளி போலீசார், பார்த்திபன் 45, அவர் மகன் பிரபு 20, ஆகியோரை கைது செய்தனர். எஸ்.பி., சிபி சக்கரவர்த்தி உத்தரவுப்படி கசியநாயக்கன்பட்டி, நாட்றம்பள்ளி, செட்டேரி டேம், குனிச்சியூர் என 10 இடங்களில் செயல்பட்ட செயற்கை மணல் தொட்டிகளை இன்று இடித்துத் தள்ளினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X