காங்கேயம் இன மாடுகள் ரூ.22 லட்சத்துக்கு விற்பனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காங்கேயம் இன மாடுகள் ரூ.22 லட்சத்துக்கு விற்பனை

Added : ஆக 22, 2021
Share
காங்கேயம்:காங்கேயம் அடுத்துள்ள நத்தக்காடையூர் அருகே, காங்கேயம் இன மாடுகள், 22 லட்சம் ரூபாய்க்கு விற்றது.திருப்பூர் மாவட்டம் காங்கேயம், நத்தக்காடையூர் அருகே, பழையகோட்டை மாட்டுத்தாவணியில் காங்கேயம் இன மாடுகளுக்கான சந்தை, ஞாயிறு தோறும் நடக்கிறது. திருப்பூர் மட்டுமின்றி, கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல், நாமக்கல், திருச்சி, சேலம் மாவட்ட விவசாயிகளும், மாடுகளை விற்பனைக்கு
 காங்கேயம் இன மாடுகள் ரூ.22 லட்சத்துக்கு விற்பனை

காங்கேயம்:காங்கேயம் அடுத்துள்ள நத்தக்காடையூர் அருகே, காங்கேயம் இன மாடுகள், 22 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம், நத்தக்காடையூர் அருகே, பழையகோட்டை மாட்டுத்தாவணியில் காங்கேயம் இன மாடுகளுக்கான சந்தை, ஞாயிறு தோறும் நடக்கிறது. திருப்பூர் மட்டுமின்றி, கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல், நாமக்கல், திருச்சி, சேலம் மாவட்ட விவசாயிகளும், மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மாடுகளை வாங்க விவசாயிகள் வருகின்றனர். இடைத்தரகர் யாரும் இன்றி மாடுகளை நேரடியாக விலைபேசி வாங்கலாம். கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின், கடந்த வாரத்தில் இருந்து சந்தை துவங்கியது.
நேற்றைய சந்தைக்கு மாடுகள், காளைகள், கிடாரி மற்றும் காளை கன்றுகள் என 114 கால்நடைகள் வரத்தாகின. மாடுகள் 20ஆயிரம் ரூபாய் முதல் 79 ஆயிரம் ரூபாய் வரை விற்றன. கிடாரி கன்று 12 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை விற்றது. மொத்தம் 60 கால்நடைகள் 22 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாக சந்தை பொருப்பாளர் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X