100 நாள் தொழிலாளர்கள் மனு| Dinamalar

100 நாள் தொழிலாளர்கள் மனு

Added : ஆக 22, 2021 | |
பவானி: பவானி, மேட்டூர் சாலையில் உள்ள தனியார் வங்கியில், பவானி யூனியனுக்கு உட்பட்ட மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்ட தொழிலாளர்கள் சங்கம் சார்பில், வங்கியில் உள்ள குறைகளை தீர்க்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதில், 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு மாதாந்திர சம்பளம் அவர்களின் பணித்தளத்திலேயே, வங்கி ஊழியர் மூலம் வழங்க வேண்டும். வங்கி சேமிப்பு

பவானி: பவானி, மேட்டூர் சாலையில் உள்ள தனியார் வங்கியில், பவானி யூனியனுக்கு உட்பட்ட மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்ட தொழிலாளர்கள் சங்கம் சார்பில், வங்கியில் உள்ள குறைகளை தீர்க்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதில், 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு மாதாந்திர சம்பளம் அவர்களின் பணித்தளத்திலேயே, வங்கி ஊழியர் மூலம் வழங்க வேண்டும். வங்கி சேமிப்பு கணக்கு புத்தகத்தில் சம்பளம் விபரத்தை பதிவு செய்து, புதிய பாஸ் புத்தகம் வழங்க வேண்டும் என, குறிப்பிடப்பட்டிருந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X