ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை

Added : ஆக 22, 2021
Share
ஈரோடு: அதிகாலை முதல் கொட்டிய கனமழையால், ஈரோட்டில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது, பல சாலைகள் சகதி காடுகளாக மாறின. ஈரோட்டில் நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு பெய்த மழை, 10:00 மணி வரை கொட்டி தீர்த்தது. இதனால் அன்றாட பணிகளுக்கு, பலர் வெளியில் செல்ல முடியவில்லை. ஈரோட்டில் பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக மணிக்கூண்டு பகுதியில் சாக்கடை பாலம் கட்டும் பணி

ஈரோடு: அதிகாலை முதல் கொட்டிய கனமழையால், ஈரோட்டில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது, பல சாலைகள் சகதி காடுகளாக மாறின. ஈரோட்டில் நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு பெய்த மழை, 10:00 மணி வரை கொட்டி தீர்த்தது. இதனால் அன்றாட பணிகளுக்கு, பலர் வெளியில் செல்ல முடியவில்லை. ஈரோட்டில் பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக மணிக்கூண்டு பகுதியில் சாக்கடை பாலம் கட்டும் பணி பாதிக்கப்பட்டது. கருங்கல்பாளையம் பகுதியில், சாலைகள் தோண்டப்பட்ட இடங்களில் மழைநீர் தேங்கி குண்டும் குழியுமாக மாறியது. வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். ஸ்டார் தியேட்டர் எதிரில், மஞ்சள் மண்டி அதிகம் உள்ள பகுதியான குப்பைக்காடு சாலையில் உள்ள குழியில் மழை நீர் தேங்கியது. மதியம் வரை மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது.

* ஈரோட்டில் அதிகபட்சமாக, 42 மி.மீ., மழை பதிவானது. பவானிசாகர், 3.4, மொடக்குறிச்சி, 31, கவுந்தப்பாடி, 18, அம்மாபேட்டை, 3 மி.மீ., மழை பதிவானது.


* அந்தியூர், அம்மாபேட்டை, பவானி, பு.புளியம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலையில் இருந்து மதியம் வரை, மழை பெய்து கொண்டே இருந்தது. மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சிலரின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு, வீடுகளிலேயே முடங்கி இருந்தனர்.


* கோபியில் நேற்று காலை, 7:00 மணி முதல் மழை பெய்ய துவங்கியது. சத்தி சாலை, மொடச்சூர் சாலை, ஈரோடு சாலை, புதுப்பாளையம், பாரியூர் சாலை, கச்சேரிமேடு பகுதிகளில் மழை பெய்தது. 11:00 மணிக்கு மேல் வானம் மேகமூட்டமாகவும், அடிக்கடி தூரல் மழை பெய்தபடியும் இருந்தது.


* பெருந்துறை மற்றும் சுற்றுப்பகுதிகளில், நேற்று காலை, 6:00 மணியளவில் மழை பெய்ய துவங்கியது. இரண்டு மணி நேரம் நீடித்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X