பொது செய்தி

தமிழ்நாடு

எளிமையாக ஓணம் திருவிழா

Added : ஆக 22, 2021
Share
Advertisement
ஈரோடு: கேரளா மாநிலத்தின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றான ஓணம் திருவிழா, ஈரோட்டில் நேற்று எளிமையாக கொண்டாடப்பட்டது. ஈரோட்டில் கேரள மாநில மக்கள் அதிகம் வசிக்கும் ரயில்வே காலனி, கொல்லம்பாளையம், கருங்கல்பாளையம், பழைய பாளையம் பகுதிகளில் தங்கள் வீட்டு முன், அத்தப்பூ கோலம் போட்டு, கொரோனா கட்டுப்பாடுகளால் எளிமையாக கொண்டாடினர். நேற்று அதிகாலை எழுந்து புனித நீராடி, புத்தாடை

ஈரோடு: கேரளா மாநிலத்தின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றான ஓணம் திருவிழா, ஈரோட்டில் நேற்று எளிமையாக கொண்டாடப்பட்டது. ஈரோட்டில் கேரள மாநில மக்கள் அதிகம் வசிக்கும் ரயில்வே காலனி, கொல்லம்பாளையம், கருங்கல்பாளையம், பழைய பாளையம் பகுதிகளில் தங்கள் வீட்டு முன், அத்தப்பூ கோலம் போட்டு, கொரோனா கட்டுப்பாடுகளால் எளிமையாக கொண்டாடினர். நேற்று அதிகாலை எழுந்து புனித நீராடி, புத்தாடை உடுத்தி, சுவாமி அறை அலங்கரிக்கப்பட்டு நெற்கதிர்கள் வைக்கப்பட்டு, பல்வேறு பலகாரங்கள், மூன்று வகை பாயாசம், படையலிட்டு வாழ்நாள் முழுவதும் இனிமையான வாழ்வு அமைய வேண்டும் என, குடும்பத்தினருடன் அமர்ந்து வழிபாடு நடத்தினர். சிறியவர்கள், பெரியவர்களின் காலில் விழுந்து வணங்கி, காசு, பணம் பெற்றுக்கொண்டனர். 26 வகையான உணவு பதார்த்தங்களுடன் ஓணம் விருந்து நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X