பொது செய்தி

தமிழ்நாடு

பூங்கா சாலையில் வெட்டப்படும் மரங்கள்

Added : ஆக 22, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு வ.உ.சி., பூங்கா மைதானத்தில் விளையாட்டு மைதானம் நுழைவு வாயில் முதல், மறுபுறம் பவானி சாலை வரை இருபுறமும் ஏராளமான மரங்கள் உள்ளன. மாலை நேரங்களில் ஏராளமான பறவைகள் அடையும் இடமாக உள்ளன. பூங்கா சீரமைப்பு பணி செய்து கடந்த பிப்., மாதம் திறக்கப்பட்டது. கடந்த ஒரு வாரமாக பூங்காவில் உள்ள அனைத்து மரக்கிளையும், சில மரங்களும் முழுமையாக வெட்டி, விறகுக்கு எடுத்து

ஈரோடு: ஈரோடு வ.உ.சி., பூங்கா மைதானத்தில் விளையாட்டு மைதானம் நுழைவு வாயில் முதல், மறுபுறம் பவானி சாலை வரை இருபுறமும் ஏராளமான மரங்கள் உள்ளன. மாலை நேரங்களில் ஏராளமான பறவைகள் அடையும் இடமாக உள்ளன. பூங்கா சீரமைப்பு பணி செய்து கடந்த பிப்., மாதம் திறக்கப்பட்டது. கடந்த ஒரு வாரமாக பூங்காவில் உள்ள அனைத்து மரக்கிளையும், சில மரங்களும் முழுமையாக வெட்டி, விறகுக்கு எடுத்து செல்லப்படுகிறது. மின் கம்பிகள், போக்குவரத்து, வாகன போக்குவரத்துக்கு இவை இடையூறாக இல்லை. இருப்பினும் முழு அளவில் வெட்டப்படுகிறது. இதுபற்றி, மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் கூறியதாவது: போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் மரக்கிளைகளை மட்டும் வெட்ட, அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும் அப்பகுதியில் ஆய்வு செய்து விளக்கம் பெறப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X