பொது செய்தி

தமிழ்நாடு

ஈரோட்டில் 42 கடைகளுக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

Added : ஆக 22, 2021
Share
Advertisement
ஈரோடு: நேரக்கட்டுப்பாட்டை மீறியதாக, 42 கடைகளுக்கு, 2.10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, 10 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மாலை, 5:00 மணிக்கு மேல் மருந்தகங்கள், பால் கடைகளை தவிர பிற கடைகள் இயங்க தடை விதித்தும், சனி, ஞாயிறு கிழமைகளில் அத்தியாவசிய கடைகளை தவிர்த்து, பிற கடைகளை இயக்கக்கூடாது என மாவட்ட நிர்வாகம்தடை விதித்தது. ஈரோடு மாநகராட்சியில் கடந்த,

ஈரோடு: நேரக்கட்டுப்பாட்டை மீறியதாக, 42 கடைகளுக்கு, 2.10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, 10 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மாலை, 5:00 மணிக்கு மேல் மருந்தகங்கள், பால் கடைகளை தவிர பிற கடைகள் இயங்க தடை விதித்தும், சனி, ஞாயிறு கிழமைகளில் அத்தியாவசிய கடைகளை தவிர்த்து, பிற கடைகளை இயக்கக்கூடாது என மாவட்ட நிர்வாகம்தடை விதித்தது. ஈரோடு மாநகராட்சியில் கடந்த, 9 முதல் நேற்று முன்தினம் வரை நேரக்கட்டுப்பாட்டு உத்தரவை மீறியதாக, 42 கடைகளுக்கு தலா, 5,000 ரூபாய் என, இரண்டு லட்சத்து, 10 ஆயிரம் அபராதமும், 10 கடைகளை பூட்டி சீல் வைத்தனர். முறையாக முக கவசம் அணியாமல் வந்ததாக, 964 பேருக்கு தலா, 200 ரூபாய் என, ஒரு லட்சத்து, 92 ஆயிரத்து, 800 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X