சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அனுமதியின்றி மது விற்ற தாபா உரிமையாளர் கைது

Added : ஆக 22, 2021
Share
Advertisement
புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டியில், திறந்து இரண்டு நாட்களே ஆன தாபாவில், சட்டவிரோதமாக மது விற்ற உரிமையாளர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.புன்செய்புளியம்பட்டி போலீசார், கோவை சாலை, நால்ரோடு அடுத்த நீலிபாளையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அப்பகுதியில் செயல்படும் தாபாவில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்பனை

புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டியில், திறந்து இரண்டு நாட்களே ஆன தாபாவில், சட்டவிரோதமாக மது விற்ற உரிமையாளர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.


புன்செய்புளியம்பட்டி போலீசார், கோவை சாலை, நால்ரோடு அடுத்த நீலிபாளையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அப்பகுதியில் செயல்படும் தாபாவில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்ததை கண்டறிந்தனர். தாபா உரிமையாளர் திருப்பூரை சேர்ந்த ஆனந்த், 40, தாபா ஊழியர் கோவை மாவட்டம், சிறுமுகையை சேர்ந்த தங்கராஜ், 41, ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து விற்பனைக்கு வைத்திருந்த, 61 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஊட்டி ரெஸ்டாரன்ட் என்ற பெயரில், இரண்டு நாட்களுக்கு முன்பு தாபா திறக்கப்பட்டதாகவும், அதற்குள் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளனர் என, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X