சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாலீஸ் செய்வதாக கூறி மூன்று பவுன் நகை அபேஸ்

Added : ஆக 22, 2021
Share
Advertisement
கோபி: பாலீஸ் செய்வதாக கூறி, மூன்று பவுன் நகையை களவாடி சென்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர். கோபி அருகே கொளப்பலூரை சேர்ந்தவர் நாகம்மாள், 60, கூலித்தொழிலாளி; இவரது வீட்டுக்கு நகை பாலீஸ் செய்வதாக கூறி, இரு மர்ம நபர்கள் நேற்று காலை, 11:00 மணிக்கு சென்றனர். நாகம்மாள் மூன்று பவுன் நகையை மர்ம நபர்களிடம் கொடுத்தார். அவர்கள் ஒரு பாத்திரத்தில், மஞ்சள் தண்ணீருக்குள் நகையை போட்டு

கோபி: பாலீஸ் செய்வதாக கூறி, மூன்று பவுன் நகையை களவாடி சென்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர். கோபி அருகே கொளப்பலூரை சேர்ந்தவர் நாகம்மாள், 60, கூலித்தொழிலாளி; இவரது வீட்டுக்கு நகை பாலீஸ் செய்வதாக கூறி, இரு மர்ம நபர்கள் நேற்று காலை, 11:00 மணிக்கு சென்றனர். நாகம்மாள் மூன்று பவுன் நகையை மர்ம நபர்களிடம் கொடுத்தார். அவர்கள் ஒரு பாத்திரத்தில், மஞ்சள் தண்ணீருக்குள் நகையை போட்டு கலக்கினர். பின், அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சூடு செய்ய வேண்டும் எனக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர். அதன்படி, அடுப்பில் வைத்து சூடுபடுத்தியபின் பார்த்தபோது, பாத்திரத்தில் இருந்த நகை மாயமாகி இருப்பது தெரியவந்தது. அதன்பின் தான் மர்ம நபர்களால் ஏமாற்றப்பட்டிருப்பதை நாகம்மாள் உணர்ந்தார். இதுகுறித்து நாகம்மாள் கொடுத்த புகார்படி, சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X