சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கரும்பு பாரம் ஏற்றிய லாரி கவிழ்ந்து விபத்து

Added : ஆக 22, 2021
Share
Advertisement
புன்செய்புளியம்பட்டி: சத்தியில் செயல்படும் தனியார் சர்க்கரை ஆலைக்கு தேவையான கரும்புகள், கர்நாடக மாநிலத்தில் இருந்து லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில் தாளவாடியில் இருந்து, கரும்பு பாரம் ஏற்றிக் கொண்டு லாரி நேற்று புறப்பட்டது. சத்தியமங்கலத்தை சேர்ந்த தங்கராஜ், 50, லாரியை ஓட்டினார். கும்டாபுரம் வனச்சாலையில் வந்தபோது, மழை காரணமாக லாரி கட்டுப்பாட்டை

புன்செய்புளியம்பட்டி: சத்தியில் செயல்படும் தனியார் சர்க்கரை ஆலைக்கு தேவையான கரும்புகள், கர்நாடக மாநிலத்தில் இருந்து லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில் தாளவாடியில் இருந்து, கரும்பு பாரம் ஏற்றிக் கொண்டு லாரி நேற்று புறப்பட்டது. சத்தியமங்கலத்தை சேர்ந்த தங்கராஜ், 50, லாரியை ஓட்டினார். கும்டாபுரம் வனச்சாலையில் வந்தபோது, மழை காரணமாக லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது. கரும்புகள் சரிந்து சாலையோரம் சிதறி விழுந்தன. டிரைவர் தங்கராஜ் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு சிதறிய கரும்புகள் மாற்று லாரியில் ஏற்றப்பட்டது. தாளவாடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X