தமிழ்நாடு

தரமற்ற கட்டுமானத்தால் கால்வாய் உடைப்பு; கீழ்பவானி பாசன விவசாயிகள் குற்றச்சாட்டு

Added : ஆக 22, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு அருகே, கீழ்பவானி வாய்க்காலில் தரமற்ற கான்கிரீட் தளம், ஸ்லாப் கரை உடைந்துள்ளது. 'கான்கிரீட் தளம் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதே காரணம்' என, விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்படும் நீரால், ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில், 2.50 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. முற்றிலும்

ஈரோடு: ஈரோடு அருகே, கீழ்பவானி வாய்க்காலில் தரமற்ற கான்கிரீட் தளம், ஸ்லாப் கரை உடைந்துள்ளது. 'கான்கிரீட் தளம் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதே காரணம்' என, விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.


ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்படும் நீரால், ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில், 2.50 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. முற்றிலும் மண்ணால், 200 கி.மீ., தூரத்துக்கு வாய்க்கால் அமைந்துள்ளது. கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில் இந்த வாய்க்கால் கரை மற்றும் தளத்தை கான்கிரீட்டால் அமைத்து நவீனப்படுத்த, 760 கோடி ரூபாய் ஒதுக்கி பணிகள் துவங்கின. நிலத்தடி நீர் செரிவூட்டும் திட்டம் என்பதால், கான்கிரீட்டால் கரை, தளம் அமைத்தால், மறைமுகமாக பாசனம் பெறும், 60 ஆயிரம் ஏக்கர் நிலம், நிலத்தடி நீர், கிணறு, ஏரி, குட்டைகள் பாதிக்கும் எனக்கூறி ஒரு தரப்பு விவசாயிகள் எதிர்க்கின்றனர். மற்றொரு தரப்பு விவசாயிகள் கான்கிரீட் கரையை அமைக்க வேண்டும் என ஆதரிக்கின்றனர். இதற்கிடையில், கடந்த, 15ல் பவானிசாகர் அணை பாசனத்துக்காக, 1,000 கனஅடி நீர் வெளியேற்றினர். கடந்த, 19 ம் தேதி மாலை, 6:00 மணிக்கு ஈரோடு அடுத்த நசியனூர் கண்ணவேலம்பாளையம் கிராமத்தில் கீழ்பாவனி வாய்க்காலில் கான்கிரீட் தளம், கரை அமைத்த இடத்தில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. அதிகாலை, 4:00 மணிக்கு பொதுப்பணித்துறையினர் அவ்விடத்தை சீரமைத்தனர். ஆனால் காலை, 6:00 மணிக்கு அதே இடத்தில் இருந்து, 10 மீட்டருக்குள் மிகப்பெரிய அளவில் கான்கிரீட் தளம் உடைந்து, பூமிக்கு கீழாக புதிதாக அமைத்த கான்கிரீட் கரைக்கு அடியில் வெள்ளமாக நீர் வெளியேறியது. அருகே உள்ள கிராமங்களில் மூன்றாம் நாளாக நேற்றும் தண்ணீர் ஓடுகிறது. 100 ஏக்கருக்கு மேல் கரும்பு, தென்னை, மக்காசோளம் மற்றும் ஊடுபயிர்கள் நீரால் சூழ்ந்துள்ளன. தரமற்ற முறையில் கான்கிரீட் போடும் பணி நடப்பதால் தான் உடைப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

'ஆபத்தாக உள்ளது': கீழ்பவானி பாசன விவசாயிகள் நலச்சங்க செயலாளர் நல்லசாமி கூறியதாவது: இதுவரை மண் கரையாக இருந்தபோதுகூட, இதுபோன்ற பெரிய உடைப்பு ஏற்படவில்லை. தரமற்ற கான்கிரீட் தளம், கரையின் அடிப்பகுதியில் போதிய அழுத்தம் தராமல் ஸ்லாப் கரை அமைத்ததால் உடைந்துள்ளது. கான்கிரீட் பணி செய்த அனைத்து இடமும் ஆபத்தாக உள்ளது. இப்பணியை நிறுத்தி, கரையை மட்டும் அகலப்படுத்தி முன்புபோல தண்ணீர் திறக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

'வெடி வைத்தது காரணமா?' முள்ளம்பட்டி பஞ்., முன்னாள் தலைவர் குழந்தைசாமி கூறியதாவது: உடைப்பு ஏற்பட்ட இடத்தில் இருந்து, 50 மீட்டரில் அத்திக்கடவு- அவினாசி திட்ட குழாய் பதிப்புக்கு பணி நடக்கிறது. அங்கு பாறைகளை உடைக்க, வெடி வைத்து 10 நாட்களாக வெடிக்க செய்கின்றனர். வெடியின் அதிர்வால் இப்பகுதி வீடு, வாய்க்கால் கான்கிரீட் தளம், கான்கிரீட் கரை பலவீனமாகி, வாய்க்கால் தரை மண் வலுவிழந்து உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பே, கலெக்டரிடம் மனு வழங்கி உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

'10 நாட்களில் சீர் செய்யப்படும்': பொதுப்பணித்துறையினர் கூறுகையில்,'கரைகளில் கான்கிரீட் தளம், கரை அமைத்து சில நாட்களே ஆகிறது. இப்பணி தொடர்ந்து நடந்து வரும் நிலையில், தண்ணீர் விடப்பட்டதால் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வாய்க்கால் பூமிக்குள் உள்ள வெற்றிடம், ஓட்டைகள் மூலம் நீர் கசியும். தற்போது பெரியதாக உடைப்பாகிவிட்டது. 10 நாட்களுக்குள் சீரமைப்பு பணியை முடித்து, மீண்டும் தண்ணீர் திறக்க வழி செய்து வருகிறோம்' என்றனர். இதற்கிடையில் பாதிக்கப்பட்ட விளை நிலங்கள் குறித்து வேளாண் அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X