பொது செய்தி

தமிழ்நாடு

ஓணம் கொண்டாட்டம்

Added : ஆக 22, 2021
Share
Advertisement
சேலம்: கேரளாவில் ஓணம் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. அதையொட்டி, தமிழகத்தில் வசிக்கும் மலையாளிகள் கொண்டாடினர். சேலம், சங்கர் நகர், கேரளா சமாஜத்தில் பெண்கள் பாரம்பரிய உடை அணிந்து அத்தப்பூ கோலமிட்டு, நடனம் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். குரங்குச்சவாடி சாஸ்தா நகர் ஐயப்பன் கோவில், டவுன் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள ஐயப்பன் கோவிலில், பல்வேறு மலர்களால் அத்தப்பூ

சேலம்: கேரளாவில் ஓணம் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. அதையொட்டி, தமிழகத்தில் வசிக்கும் மலையாளிகள் கொண்டாடினர். சேலம், சங்கர் நகர், கேரளா சமாஜத்தில் பெண்கள் பாரம்பரிய உடை அணிந்து அத்தப்பூ கோலமிட்டு, நடனம் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். குரங்குச்சவாடி சாஸ்தா நகர் ஐயப்பன் கோவில், டவுன் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள ஐயப்பன் கோவிலில், பல்வேறு மலர்களால் அத்தப்பூ கோலமிட்டு பூஜை நடந்தது. அதேபோல் மாவட்டத்தில் வசிக்கும் மலையாளிகள், வீடுகளில் பண்டிகையை கொண்டாடினர். அதேபோல், சேலம், அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத மூலவர் சவுந்தரராஜருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தி தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து உற்சவர் பெருமாள், தாயார்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, மக்கள் நோயின்றி சுபிட்சமாக வாழ வேண்டி பூஜை நடந்தது. கொரோனாவால், வெள்ளி, சனி, ஞாயிறில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், நேற்று யாரும் அனுமதிக்கப்படவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X