பொது செய்தி

தமிழ்நாடு

ஏற்காட்டில் 98 மி.மீ., மழை பதிவு

Added : ஆக 22, 2021
Share
Advertisement
சேலம்: தமிழகத்தில் கடற்கரையையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், பரவலாக மழை பெய்கிறது. சேலத்தில் நேற்று காலை, 4:00 மணிக்கு கனமழை தொடங்கி, விடிய, விடிய பெய்தது. பின், மித மழையாக குறைந்து சாரலாக மாறியது. அதேபோல் மாவட்டம் முழுதும் ஆங்காங்கே மழை நீடித்தது. தாழ்வான பகுதிகளில், மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கோரிமேட்டில் தேங்கிய மழைநீரால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன.

சேலம்: தமிழகத்தில் கடற்கரையையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், பரவலாக மழை பெய்கிறது. சேலத்தில் நேற்று காலை, 4:00 மணிக்கு கனமழை தொடங்கி, விடிய, விடிய பெய்தது. பின், மித மழையாக குறைந்து சாரலாக மாறியது. அதேபோல் மாவட்டம் முழுதும் ஆங்காங்கே மழை நீடித்தது. தாழ்வான பகுதிகளில், மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கோரிமேட்டில் தேங்கிய மழைநீரால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. மக்கள் குடையுடன் நடமாடினர். அதிகாலை மழையால் இயல்பு வாழ்க்கை சற்று தடைபட்டது. அதிகபட்சம் ஏற்காட்டில், 98 மி.மீ., மழை பதிவானது. சங்ககிரி, 37, சேலம், 25.5, ஓமலூர், 4, காடையாம்பட்டி, 2, இடைப்பாடியில், 1 மி.மீ., மழை பெய்தது. கடந்த ஜூன், 1ல் தொடங்கிய தென்மேற்கு பருவமழை, நேற்று வரை, 303.5 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. இயல்பான மழை அளவு, 219.5 மி.மீ., இத்துடன் ஒப்பிடுகையில், 38 சதவீத மழை, மாவட்டத்தில் அதிகம் பெய்துள்ளது. வரும், 25 வரை மழை நீடிக்கும் என, வானிலை மைய அதிகாரிகள் கூறினர். செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை இருக்கும். அடுத்து வடகிழக்கு மழையும் கைகொடுக்கும் என்பதால், நடப்பாண்டு சேலத்தில் அதிக மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம் என, அதிகாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X