பொது செய்தி

தமிழ்நாடு

வேலை வழங்க ஆர்.டி.ஓ., ஆய்வு

Added : ஆக 22, 2021
Share
Advertisement
ஆத்தூர்: கெங்கவல்லி, ஆணையாம்பட்டி புதூரை சேர்ந்த, பெரியசாமி மகன் சின்னசாமி, 23. இவருக்கு திருமணமாகி மூன்று மாதமான நிலையில், கடந்த ஜூன், 16ல், பைக்கில் வந்தபோது, சாலையோரத்தில் அறுத்துக்கொண்டிருந்த புளிய மரம் விழுந்து உயிரிழந்தார். ஓராண்டுக்கு முன், உடல் நலக்குறைவால் தந்தை பெரியசாமியும் இறந்தார். பெரியசாமியின் மனைவி வள்ளியம்மை, பட்டப்படிப்பு முடித்த மகள்களான ரேகா, 27, அரசி,

ஆத்தூர்: கெங்கவல்லி, ஆணையாம்பட்டி புதூரை சேர்ந்த, பெரியசாமி மகன் சின்னசாமி, 23. இவருக்கு திருமணமாகி மூன்று மாதமான நிலையில், கடந்த ஜூன், 16ல், பைக்கில் வந்தபோது, சாலையோரத்தில் அறுத்துக்கொண்டிருந்த புளிய மரம் விழுந்து உயிரிழந்தார். ஓராண்டுக்கு முன், உடல் நலக்குறைவால் தந்தை பெரியசாமியும் இறந்தார். பெரியசாமியின் மனைவி வள்ளியம்மை, பட்டப்படிப்பு முடித்த மகள்களான ரேகா, 27, அரசி, 23, வாழ்வாதாரத்துக்கு, அரசு பணி ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட உதவி செய்யும்படி, ஜூலை, 15ல், செந்தாரப்பட்டி வந்த வி.சி., தலைவர் திருமாவளவனிடம் மனு அளித்தார். இதுகுறித்து, அதே நாளில், நாகியம்பட்டி வந்த, சேலம் கலெக்டர் கார்மேகத்திடம், திருமாவளவன் கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக, கல்வி சான்றுகளை, ஆத்தூர் ஆர்.டி.ஓ., சரண்யா நேற்று பெற்றுக்கொண்டு, 'ஒப்பந்த அடிப்படையில் அரசு பணி வழங்கப்படும். பின், நிரந்தர பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, ஆர்.டி.ஓ., உறுதியளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X