பொது செய்தி

தமிழ்நாடு

இன்று 57,550 பேருக்கு தடுப்பூசி

Added : ஆக 22, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் மாவட்டத்தில், 57 ஆயிரத்து, 550 பேருக்கு இன்று, தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதுகுறித்து, சேலம் கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி சேர்ந்து, 57 ஆயிரத்து, 550 வரப்பெற்றுள்ளதால், மாவட்டத்தில் ஆக., 22ல்(இன்று), 138 மையங்களில் செலுத்தப்படுகிறது. சேலம் சுகாதார மாவட்டத்தில், கோவாக்சின், கோவிஷீல்டு முறையே, 8,010; 12 ஆயிரத்து, 720, ஆத்தூர்

சேலம்: சேலம் மாவட்டத்தில், 57 ஆயிரத்து, 550 பேருக்கு இன்று, தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதுகுறித்து, சேலம் கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி சேர்ந்து, 57 ஆயிரத்து, 550 வரப்பெற்றுள்ளதால், மாவட்டத்தில் ஆக., 22ல்(இன்று), 138 மையங்களில் செலுத்தப்படுகிறது. சேலம் சுகாதார மாவட்டத்தில், கோவாக்சின், கோவிஷீல்டு முறையே, 8,010; 12 ஆயிரத்து, 720, ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில், 2,460; 13 ஆயிரத்து, 360; சேலம் மாநகராட்சிக்கு, கோவிஷீல்டு, 20 ஆயிரம், நிறுவனங்களுக்கு, 1,000 என, தனித்தனியே பிரித்து அனுப்பப்பட்டுள்ளன. மக்கள், முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி, தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இனி 505 மையங்கள்: சேலம் மாவட்டத்தில், தற்போது போதிய தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதோடு, தொடர்ந்து தடையின்றி அனுப்பப்பட உள்ளது. நாளை முதல், 505 மையங்களில் தடுப்பூசி செலுத்த, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் தவறாமல் செலுத்திக்கொள்ள வேண்டும். 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாவட்டமாக, சேலத்தை உருவாக்க, மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என, கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X