பொது செய்தி

தமிழ்நாடு

கோவில் பின்புறம் தடையைமீறி திருமணம்

Added : ஆக 22, 2021
Share
Advertisement
வாழப்பாடி: தான்தோன்றீஸ்வரர் கோவிலில், தடையை மீறி திருமணம் நடத்தப்படுகிறது. கொரோனாவால், வெள்ளி, சனி, ஞாயிறில் கோவில் நடை திறக்கவும், திருமணம் நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதன்படி, வாழப்பாடி, பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் மூடப்பட்டுள்ளது. ஆனால், சுபமுகூர்த்தமான நேற்று முன்தினம் காலை, கோவில் பின்புறம், உறவினர்களுடன் மணமக்களை வரவழைத்து, வசிஷ்ட நதிக்கரையிலுள்ள

வாழப்பாடி: தான்தோன்றீஸ்வரர் கோவிலில், தடையை மீறி திருமணம் நடத்தப்படுகிறது. கொரோனாவால், வெள்ளி, சனி, ஞாயிறில் கோவில் நடை திறக்கவும், திருமணம் நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதன்படி, வாழப்பாடி, பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் மூடப்பட்டுள்ளது. ஆனால், சுபமுகூர்த்தமான நேற்று முன்தினம் காலை, கோவில் பின்புறம், உறவினர்களுடன் மணமக்களை வரவழைத்து, வசிஷ்ட நதிக்கரையிலுள்ள விநாயகர் கோவிலில் சோடியம் மின் விளக்குகளை கட்டி, 50க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு சமூக இடைவெளியின்றி, போலி அர்ச்சகர்கள் திருமணம் செய்து வைத்து பணம் வசூலித்துள்ளனர். இதனால், அங்கு ஏராளமானோர் குவிவதால், கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க, கோவில் நிர்வாகமும் நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், போலி அர்ச்சகர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X