சம்பவம் செய்தி

தமிழ்நாடு

யானை தந்தம் கடத்தல் வழக்கு: மருத்துவர் உள்பட 3 பேருக்கு வலை

Added : ஆக 22, 2021
Share
Advertisement
சேலம்: யானை தந்தங்கள் கடத்தல் வழக்கில், மருத்துவர் உள்பட, 3 பேரை வனத்துறையினர் தேடுகின்றனர். வாழப்பாடியில், யானை தந்தங்கள் கடத்தல் வழக்கில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த சசிகுமார், 22, சேட்டு, 41, முதுகுளத்தூர், சாத்தனூர் அருண்குமார், மேட்டூர் பரத், 23, பிரவீன்குமார், 24 ஆகியோரை, கோவை தனிப்படை வனத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்தனர். இரு யானை தந்தங்களையும் பறிமுதல்

சேலம்: யானை தந்தங்கள் கடத்தல் வழக்கில், மருத்துவர் உள்பட, 3 பேரை வனத்துறையினர் தேடுகின்றனர். வாழப்பாடியில், யானை தந்தங்கள் கடத்தல் வழக்கில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த சசிகுமார், 22, சேட்டு, 41, முதுகுளத்தூர், சாத்தனூர் அருண்குமார், மேட்டூர் பரத், 23, பிரவீன்குமார், 24 ஆகியோரை, கோவை தனிப்படை வனத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்தனர். இரு யானை தந்தங்களையும் பறிமுதல் செய்தனர். அவர்கள், சேலம் மாவட்ட வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அதனால், 5 பேர் மீது வாழப்பாடி வனச்சரகத்தில் வழக்குப்பதிந்து விசாரிக்கப்பட்டது.


இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது: யானை தந்தம் விற்பது தொடர்பாக, 15 மாவட்டங்களில், 20க்கும் மேற்பட்டோருக்கு தொடர்பு உள்ளது. இவர்களுக்கு, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு முகவர் உள்ளனர். தந்தம் படங்களை மொபைல் மூலம் அனுப்பி, பேரம் பேசி விற்பனை நடந்துள்ளது. இவர்கள் யாரிடம் தொடர்பில் இருந்தனர் என, அவர்களின் மொபைல் எண் மூலம் பட்டியல் எடுத்துள்ளோம். அவர்கள் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என தேடுகிறோம். இந்த வழக்கில், கள்ளக்குறிச்சியை சேர்ந்த மருத்துவர் உள்பட இருவர், மேட்டூரை சேர்ந்த ஒருவரை தேடுகிறோம். கடத்தல் கும்பலுக்கு ஓசூர், கோவை, சத்தியமங்கலம் உள்ளிட்ட வனப்பகுதியில் யானை வேட்டை கும்பலிடம் இருந்து தந்தங்கள் கிடைத்திருக்கலாம். இதுகுறித்தும் விசாரிக்கிறோம். பணக்காரர்கள், யானை தந்தம், அதன் மூலம் செய்யப்படும் கலைபொருட்களை வீட்டில் வைத்திருந்தால் நல்லது என கருதி சட்டவிரோதமாக வாங்கியுள்ளனர். இப்படி வாங்கியவர்கள் குறித்தும் விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X