பொது செய்தி

தமிழ்நாடு

என்.சி.சி., மாணவர்களின் 'பிட் இந்தியா ரன்' ஓட்டம்

Added : ஆக 22, 2021
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரியில், என்.சி.சி., மாணவர்கள் பங்கேற்ற, பிரதமரின் 'பிட் இந்தியா ரன்' என்ற உடல் வலிமை ஓட்டப்பந்தயம் நடந்தது. தர்மபுரியில், பிரதமரின் 'பிட் இந்தியா ரன்' என்ற உடல் வலிமை ஓட்டப்பந்தய நிகழ்ச்சி நேற்று நடந்தது. தர்மபுரி, அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், என்.சி.சி., மாணவர்கள் பங்கேற்ற இந்த ஓட்டப்பந்தய நிகழ்ச்சியை, டி.எஸ்.பி., அண்ணாதுரை மற்றும் மாவட்ட

தர்மபுரி: தர்மபுரியில், என்.சி.சி., மாணவர்கள் பங்கேற்ற, பிரதமரின் 'பிட் இந்தியா ரன்' என்ற உடல் வலிமை ஓட்டப்பந்தயம் நடந்தது. தர்மபுரியில், பிரதமரின் 'பிட் இந்தியா ரன்' என்ற உடல் வலிமை ஓட்டப்பந்தய நிகழ்ச்சி நேற்று நடந்தது. தர்மபுரி, அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், என்.சி.சி., மாணவர்கள் பங்கேற்ற இந்த ஓட்டப்பந்தய நிகழ்ச்சியை, டி.எஸ்.பி., அண்ணாதுரை மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் பொன்முடி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்த ஓட்டப்பந்தயத்தின் நோக்கம், இந்தியாவிலுள்ள மக்கள் உடல் ஆரோக்கியத்தோடு வாழ, யோகா மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள, விழிப்புணர்வு ஏற்படுத்தவே என, அவர்கள் மாணவர்களுக்கு விளக்கினர். இதில், 50க்கும் மேற்பட்ட என்.சி.சி., மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இவர்கள், அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து, தர்மபுரி அடுத்த பாரதிபுரம் வரை சென்று, மீண்டும் பள்ளிக்கு திரும்பினர். பள்ளி, என்.சி.சி., அலுவலர் முருகேசன், தலைமையாசிரியர் மணிவண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X