பொது செய்தி

தமிழ்நாடு

'அர்ச்சகர் நியமனத்தில் இட ஒதுக்கீடு வேண்டும்'

Added : ஆக 22, 2021
Share
Advertisement
பென்னாகரம்: ''அர்ச்சகர் நியமனத்தில், இடஒதுக்கீடு வேண்டும்,'' என, திரைப்பட இயக்குனர் கவுதமன் கூறினார். தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே, ஊத்துக்குழி மலை மாதேஸ்வரன் கோவில் மற்றும் சத்யபாமா அறக்கட்டளை இணைந்து, அனைத்து வகை கோயில் கருவறைக்கான தமிழ் ஆகம பயிற்சியை நடத்தியது. பயிற்சி பெற்றவர்களுக்கு, திரைப்பட இயக்குனர் கவுதமன் சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் அவர்,

பென்னாகரம்: ''அர்ச்சகர் நியமனத்தில், இடஒதுக்கீடு வேண்டும்,'' என, திரைப்பட இயக்குனர் கவுதமன் கூறினார். தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே, ஊத்துக்குழி மலை மாதேஸ்வரன் கோவில் மற்றும் சத்யபாமா அறக்கட்டளை இணைந்து, அனைத்து வகை கோயில் கருவறைக்கான தமிழ் ஆகம பயிற்சியை நடத்தியது. பயிற்சி பெற்றவர்களுக்கு, திரைப்பட இயக்குனர் கவுதமன் சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: தற்போது அனைத்து சமூகத்திலும் பணி நியமனம் செய்துள்ள அர்ச்சகர்களுக்கு, வயது வரம்பு நிர்ணயம் செய்துள்ளதை போன்று, ஏற்கனவே பணியாற்றி வரும் அர்ச்சர்களுக்கு வயது வரம்பை கொண்டு வர வேண்டும். தமிழ் கோவில்களில் இட ஒதுக்கீட்டை பின்பற்றி அர்ச்சகர்களை நியமனம் செய்ய வேண்டும். தமிழக அரசு உடனடியாக திருச்சி சிறப்பு முகாமிலுள்ள இலங்கை தமிழர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். 'நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும். ஏழு பேர் விடுதலையை விரைந்து முடிக்க வேண்டும். தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலை எனும் சட்டத்தை இயற்ற வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X