சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிரானைட் கற்கள் கடத்திய இரண்டு லாரிகள் பறிமுதல்

Added : ஆக 22, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, கனிம வள அதிகாரி பொன்னுமணி தலைமையில், அதிகாரிகள் மகாராஜகடை பஸ் ஸ்டாண்ட் அருகில் ரோந்து சென்றனர். அங்கு நின்ற லாரியை சோதனை செய்தபோது, அதில் ஆறு பெரிய கற்களை கடத்தியது தெரிந்தது. விசாரணையில் அக்கற்கள் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியிலிருந்து வரட்டனப்பள்ளிக்கு கொண்டு சென்றது தெரிந்தது. பொன்னுமணி புகாரின்படி மகாராஜகடை போலீசார் லாரியை பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, கனிம வள அதிகாரி பொன்னுமணி தலைமையில், அதிகாரிகள் மகாராஜகடை பஸ் ஸ்டாண்ட் அருகில் ரோந்து சென்றனர். அங்கு நின்ற லாரியை சோதனை செய்தபோது, அதில் ஆறு பெரிய கற்களை கடத்தியது தெரிந்தது. விசாரணையில் அக்கற்கள் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியிலிருந்து வரட்டனப்பள்ளிக்கு கொண்டு சென்றது தெரிந்தது. பொன்னுமணி புகாரின்படி மகாராஜகடை போலீசார் லாரியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர். இதேபோல கந்திகுப்பம் அடுத்த செந்தாரப்பள்ளி கிராம நிர்வாக அலுவலகம் அருகில், அதிகாரிகள் ரோந்து சென்றனர். அங்கு கேட்பாரற்று நின்ற லாரியை சோதனை செய்தபோது, இரண்டு பெரிய கிரானைட் கற்கள் கடத்தியது தெரிந்தது. இதையடுத்து அதிகாரி புகாரின்படி கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X