சேதமான நிலையில் கட்டடம்: இடித்து அகற்ற கோரிக்கை

Added : ஆக 22, 2021
Share
Advertisement
போச்சம்பள்ளி: சேதமான நிலையிலுள்ள திப்பனூர் ஆரம்ப கூட்டுறவு சங்க கட்டடத்தை இடித்து அகற்ற, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.போச்சம்பள்ளி அடுத்த திப்பனூரில், 100க்கும் மேற்பட்ட பனை தொழிலாளர்கள் உள்ளனர். பதநீர் எடுக்க கட்டுப்பாடால், பனை தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்தது. இதனால் பனை தொழிலாளர்கள் பெங்களூரு போன்ற நகரங்களுக்கு கூலிவேலைக்கு சென்றுவிட்டனர். இந்நிலையில்

போச்சம்பள்ளி: சேதமான நிலையிலுள்ள திப்பனூர் ஆரம்ப கூட்டுறவு சங்க கட்டடத்தை இடித்து அகற்ற, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


போச்சம்பள்ளி அடுத்த திப்பனூரில், 100க்கும் மேற்பட்ட பனை தொழிலாளர்கள் உள்ளனர். பதநீர் எடுக்க கட்டுப்பாடால், பனை தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்தது. இதனால் பனை தொழிலாளர்கள் பெங்களூரு போன்ற நகரங்களுக்கு கூலிவேலைக்கு சென்றுவிட்டனர். இந்நிலையில் கடந்த, 1981-1982ல் மாவட்ட வறட்சி கழகம் மூலம் வறட்சிக்கு இலக்காகும் பகுதி திட்டத்தில், ஆரம்ப பனை வெல்ல கூட்டுறவு சங்க கட்டடம் இக்கிராமத்தில் கட்டப்பட்டது. தற்போது, இக்கட்டடம் பயனற்று சேதமாகி உள்ளது. கட்டட அடிப்பகுதி முழுவதும் பெயர்ந்துள்ளதால் எந்நேரமும் கட்டடம் சரிந்து கீழே விழும் அபாயம் உள்ளது. இக்கட்டடத்தை இடித்து அகற்ற, அக்கிராம மக்கள் பல முறை மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதுகுறித்து, கதர்கிராம தொழில் உதவி இயக்குனர் விஜயலட்சுமியிடம் கேட்டபோது, ''திப்பனூர் பனைவாரிய தலைவர் தீர்மானம் போட்டு, இடித்துக்கொள்ள அவர்களுக்கு கடிதம் அனுப்பி விடுகிறேன். அதனடிப்படையில் அவர்கள் இடித்துக்கொள்ளலாம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X