பொது செய்தி

தமிழ்நாடு

பிரம்ம மலைக்கு தனிநபர் அமைத்த சாலை பணி தடுத்து நிறுத்தம்

Added : ஆக 22, 2021
Share
Advertisement
ஓசூர்: ஓசூரில் பிரம்மன், விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று கோவில்கள் பிரம்ம மலை மீது ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன. இதில், மலை அடிவாரம் மற்றும் மலை மீதுள்ள கோவில்களை, ஹிந்து சமய அறநிலையத்துறை தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில், மலை அடிவாரத்திலிருந்து, உச்சி வரையுள்ள சுவாமிகளை தரிசனம் செய்ய, சாலை அமைப்பதாக கூறி, தனி நபர் ஒருவர், பொக்லைன் வாகனம் உதவியுடன்

ஓசூர்: ஓசூரில் பிரம்மன், விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று கோவில்கள் பிரம்ம மலை மீது ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன. இதில், மலை அடிவாரம் மற்றும் மலை மீதுள்ள கோவில்களை, ஹிந்து சமய அறநிலையத்துறை தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில், மலை அடிவாரத்திலிருந்து, உச்சி வரையுள்ள சுவாமிகளை தரிசனம் செய்ய, சாலை அமைப்பதாக கூறி, தனி நபர் ஒருவர், பொக்லைன் வாகனம் உதவியுடன் கடந்த, 10 நாட்களுக்கும் மேலாக, பாறைகளை உடைத்து, பணியை மேற்கொண்டார். இதற்கு, மாவட்ட நிர்வாக அனுமதியை பெறவில்லை என்பதால், மாவட்ட கலெக்டருக்கு புகார் சென்றது. அவரது உத்தரவின்படி, ஓசூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, நேற்று நேரில் ஆய்வு செய்து, சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X